நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் சமூக நலத்துறை மருத்துவர் சரோஜா மாவட்ட ஆட்சியர் மெகராஜ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்திகணேசன், பொது சுகாதாரம், குடும்ப நலம், வருவாய்த் துறை அலுவலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள், சிகிச்சை விபரங்கள் குறித்து அலுவலர்களுடன் அமைச்சர் ஆலோசனை நடத்தினார்.
கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சரோஜா "தமிழ்நாட்டில் கரோனாவை கட்டுப்படுத்துவதில் நாமக்கல் மாவட்டம் முதன்மையாக உள்ளது.
தமிழ்நாட்டில் 43ஆயிரத்து 320 சத்துணவு மையங்கள் மூலமாக 48 லட்சம் பள்ளி மாணவ, மாணவிகளுக்கும், 54ஆயிரத்து 449 அங்கன்வாடி மையங்கள் மூலமாக 17 லட்சம் குழந்தைகளுக்கு உலர் உணவுகள் (அரிசி, பருப்பு) வழங்கப்பட்டு வருகிறது.
அவர்களுக்கு முட்டைகள் பள்ளிகள் திறந்தவுடன் வழங்கப்படும். மாற்று திறனாளிகளுக்கு 135 கோடியே 50 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டு மாநிலத்தில் உள்ள அனைத்து மாற்று திறனாளிகளுக்கும் ஆயிரம் ரூபாய் அவர்களது வீடுகளுக்கே சென்று வழங்கும் பணி 70 சதவீதம் நிறைவடைந்துள்ளது" எனத் தெரிவித்தார்.