பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான அஃப்ரிடி, தனது கிரிக்கெட் வாழ்க்கை குறித்து கேம் சேஞ்சர் என்ற சுயசரிதை புத்தகத்தை வெளியிட்டார். அந்த புத்தகத்தில், அஃப்ரிடி, சக வீரர் வக்கார் யூனிஸ், ஜாவித் மியான்தாத், இந்திய வீரர் கவுதம் கம்பிர் உள்ளிட்ட வீரர்கள் குறித்து கடுமையாக விமர்சித்து, சர்ச்சையில் சிக்கினார்.
![Game Changer](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/3179366_shahid-afridinew.jpg)
இதையடுத்து, தன்னை குறித்து விமர்சித்த அஃப்ரிடிக்கு கவுதம் கம்பிர் ட்விட்டரில் தக்க பதிலடி கொடுத்துள்ளார். தற்போது, அவரது வரிசையில், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் இம்ரான் ஃபர்ஹத்தும் இணைந்துள்ளார்.
![Imran Farhat](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/imran-farahat_0705newsroom_1557207441_644.jpg)
அஃப்ரிடி குறித்து அவர் வரிசையாக ட்வீட்டுகளை பதிவு செய்து அவரது முகத்திரையை கிழித்துள்ளார். அதில், பாகிஸ்தான், கிரிக்கெட்டில் கெட்ட பெயர் பெற்றதற்கான காரணங்களை அவர் அந்த புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். அவர் குறிப்பட்டதை போலவே, பாகிஸ்தான் கிரிக்கெட் சீரழந்ததற்கு, அவர்தான் முக்கிய காரணம் என குறிப்பிட்டார்.
பின், தனது புத்தகத்தில், உண்மையான வயதுக் குறித்து தற்போது கூறிய அவர், பெரிய உத்தமன் போல் பல்வேறு ஜாம்பவான் வீரர்களை குறை கூறுகிறார். சன்யாசி போல் இருக்கும் அவரை குறித்து கூறுவதற்கு என்னிடம் ஏராளமான விஷயங்கள் உள்ளன. அவருடன் விளையாடியது ரொம்ப சந்தோஷம்தான். அரசியல்வாதி ஆகுவதற்கு அனைத்து தகுதிகளும் அவருக்கு உள்ளது.
![Imran Farhat tweet](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/3216714_tweet.jpg)
எந்த எந்த வீரர்கள் குறித்து அவர், தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளாரா அவர்கள் எல்லாம் அஃப்ரிடியின் சுயநலத்தை குறித்த வாய்திறக்க வேண்டும். தன் சுயநலத்திற்காக பல்வேறு கிரிக்கெட் வீரர்களின் வாழ்க்கையை அவர் கெடுத்துள்ளார். என குறிப்பிட்டார்.
![mran-farhat](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/3216714_twet.jpg)
இதற்கிடையில், அஃப்ரிடியின் கேம் சேஞ்சர் புத்தகத்தை மேலும் வெளியிட தடை விதிக்கக் கோரி பாகிஸ்தான் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பாகிஸ்தான் அணிக்காக இம்ரான் ஃபர்ஹத் 40 டெஸ்ட், 58 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ளார்.