சென்னை பல்லாவரத்தை அடுத்த பம்மல், அரங்கநாதன் தெருவைச் சேர்ந்தவர் ரம்யா(16). இவர் பத்தாவது படித்து விட்டு, வீட்டில் இருந்து வந்தார்.
இவரது தந்தை கொத்தனாராக பணிபுரிந்து வருகிறார். தாய் பழ வியாபாரம் செய்து வருகிறார். இதனால் வீட்டு வேலைகளை ரம்யாவை செய்யுமாறு அவரது தாய் கூறியுள்ளார்.
ஆனால் ரம்யா வீட்டு வேலைகளை செய்யவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அவரது தாய் அவரை திட்டியுள்ளார். இதில் மனமுடைந்த ரம்யா, நேற்று தனது அறையில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வெகுநேரமாகியும் மகள் வெளியே வராததால், சந்தேகமடைந்த பெற்றோர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, அங்கு ரம்யா தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தது தெரியவந்தது.
இது குறித்து சங்கர் நகர் காவல் நிலைய காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
(நில்லுங்கள்.. தற்கொலை தீர்வல்ல.. தமிழ்நாட்டில் 24 மணி நேரம் செயல்படும், 104 என்ற இலவச எண்ணில் தொடர்பு கொண்டு, தற்கொலை எண்ணத்தை பேசி தீர்வு காணுங்கள்.)
இதையும் படிங்க: தந்தை - மகன் இறந்த விவகாரம்: கொலை வழக்காகப் பதிவுசெய்ய கோரிக்கை