ETV Bharat / briefs

பட்டியலின மக்கள் வீடுகள் இடிந்து தரைமட்டம்! - Schedule Caste Government House collapsed

தேனி: தேவாரம் அருகே பட்டியலின மக்களுக்கு அரசால் கட்டித்தரப்பட்ட தொகுப்பு வீடுகள் இடிந்து தரைமட்டமாகின.

Government House
Government House
author img

By

Published : Jul 8, 2020, 10:22 PM IST

தேனி மாவட்டம், தம்மிநாயக்கன்பட்டியில் உள்ளது, இந்திரா காலனி. அப்பகுதியைச் சேர்ந்த 25 ஆதி திராவிட குடும்பங்களுக்குக் கடந்த 1989ஆம் ஆண்டு அரசால் கான்கிரீட் போட்ட தொகுப்பு வீடுகள் கட்டித்தரப்பட்டன.

தொடர்ந்து 30 ஆண்டுகள் பழமையான இந்தத் தொகுப்பு வீடுகள் நாளடைவில், சுவர்களில் விரிசல் ஏற்பட்டு கட்டடங்கள் பழுதடைந்து காணப்பட்டன. இந்நிலையில், இந்திரா காலனியைச் சேர்ந்த லிங்கமுத்து, கருப்பாயி தம்பதியின் வீட்டின் கான்கிரீட் மேல்தளம் நேற்று(ஜூலை 8) மாலை இடிந்து விழுந்து தரை மட்டமாகின.

இதில், வீட்டில் இருந்த சுமார் 2 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் சேதமடைந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த விபத்தில் நல்வாய்ப்பாக லிங்கமுத்து குடும்பத்தினர் வீட்டில் இல்லாததால் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது.

இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் கூறுகையில், "30ஆண்டுகளுக்கு முன் அரசால் கட்டி தரப்பட்ட வீடு சேதமடைந்து எந்நேரமும் இடிந்து விழும் அபாயத்திலேயே வாழ்ந்து வந்தோம்.

இதனைப் பராமரித்து, புதுப்பித்துத் தர வேண்டும் என அரசுக்கு பலமுறை கோரிக்கை விடுத்தும் தற்போது வரை செவி சாய்க்கவில்லை.

எனவே, இந்த விபத்திற்கு பிறகாவது எஞ்சிய குடியிருப்புகளை பராமரித்து உயிரிழப்பு ஏற்படுவதை தவிர்க்க வேண்டும்" எனக் கோரிக்கை விடுக்கின்றனர்.

இதையும் படிங்க: பார்ப்பனியம் Vs பௌத்தம் சண்டை தொடர்கிறது - இயக்குநர் பா. ரஞ்சித்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.