ETV Bharat / briefs

நிறுத்தி வைக்கப்பட்ட மாதத் தவணைக்கு வட்டிக்கு மேல் வட்டி வசூலிப்பதா: உச்ச நீதிமன்றம் காட்டம்

நெருக்கடியான சமயத்தில் எடுக்கும் முடிவுகள் அதன் தீர்வுகளைத் தேடி இருக்க வேண்டும். அதை விடுத்து சலுகைகள் அளித்து விட்டு, வட்டிக்கு மேல் வட்டி வசூல் செய்யும் கணக்கு ஏற்புடையதல்ல என நீதிபதிகள் எஸ்.கே. கவுல், எம்.ஆர். ஷா ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு தெரிவித்துள்ளது.

loan payment issue
loan payment issue
author img

By

Published : Jun 17, 2020, 6:39 PM IST

டெல்லி: சலுகைகள் அளித்து விட்டு, வட்டிக்கு மேல் வட்டி வசூல் செய்யும் கணக்கு ஏற்புடையதல்ல என நீதிபதிகள் எஸ்.கே. கவுல், எம்.ஆர். ஷா ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு தெரிவித்துள்ளது.

நெருக்கடியான சமயத்தில் எடுக்கும் முடிவுகள் அதன் தீர்வுகளைத் தேடி இருக்க வேண்டும். அதை விடுத்து சலுகைகள் அளித்து விட்டு, வட்டிக்கு மேல் வட்டி வசூல் செய்யும் கணக்கு ஏற்புடையதல்ல என நீதிபதிகள் எஸ்.கே. கவுல், எம்.ஆர். ஷா ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு தெரிவித்துள்ளது.

ஒரு முடிவு தீர்க்கமாக எடுக்கப்பட்டால், அதன் பலனை பயனாளர்கள் அனுபவிக்க அனுமதிக்க வேண்டும். மேலும் வங்கிகள் இடத்தில் மட்டும் இவ்விவகாரம் குறித்து முடிவெடுக்க அனுமதிக்காமல், அரசு தலையிட்டு சுமுக தீர்வு எட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அமர்வு கேட்டுக்கொண்டுள்ளது.

இ.எம்.ஐ. தவணை நீட்டிப்புக்குள் இத்தனை இரகசியங்களா?

கரோனா பரவலைக் கட்டுப்படுத்த மார்ச் 25ஆம் தேதி முதல் பொதுமுடக்கம் அமலுக்கு வந்ததால், பொதுமக்கள் வங்கிகளில் வாங்கிய கடனுக்கான தவணை வசூலிப்பதை மார்ச் முதல் மே வரை 3 மாதங்கள் வங்கிகள் நிறுத்தி வைப்பதற்கு ரிசர்வ் வங்கி அனுமதி அளித்தது. அதைத் தொடர்ந்து, ஜூன் முதல் ஆகஸ்ட் மாதம் வரை மேலும் 3 மாதங்களுக்கு இந்த அவகாசம் நீட்டிக்கப்பட்டது. இந்த 6 தவணைகளும் கடன் தவணை கால இறுதியில் வசூலிக்கப்படும் என்றும், நிறுத்திவைப்பு காலத்துக்கு உரிய வட்டியும் கணக்கிட்டு வசூலிக்கப்படும் என்றும் வங்கிகள் அறிவித்தன.

கடனுக்கான மாத தவணையில் அசலுடன் வட்டியையும் சேர்த்துதான் வங்கிகள் வசூலிக்கின்றன. 6 மாத கடன் தவணைக்கும் சேர்த்து வைத்து பின்னர் வட்டி வசூலித்தால் வீட்டுக் கடன் போன்ற நீண்டகால கடன் பெற்றவர்களுக்கு அது கூடுதல் சுமையாக அமையுமே தவிர, நிவாரணமாக அமையாது.

இ.எம்.ஐ. விவகாரம்: ரிசர்வ் வங்கி பதிலளிக்க உத்தரவு

எனவே, இதைச் சுட்டிக்காட்டி ஆக்ராவைச் சேர்ந்த கஜேந்திர சர்மா என்பவர், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில், கடன் தவணை நிறுத்திவைப்பு காலத்தில் வட்டியைக் கணக்கிட்டு, பின்னர் வசூலிக்கும் நடைமுறையை வங்கிகள் கைவிட உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.