ETV Bharat / briefs

சவுதி மன்னர் மருத்துவமனையில் அனுமதி! - முகமது பின் சல்மான்

துபாய்: சவுதி அரேபியாவின் மன்னர் சல்மான், பித்தப்பை வீக்கம் காரணமாக மருத்துவ பரிசோதனைக்காக அந்நாட்டின் தலைநகர் ரியாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சவுதி மன்னர் மருத்துவமனையில் அனுமதி!
சவுதி மன்னர் மருத்துவமனையில் அனுமதி!
author img

By

Published : Jul 21, 2020, 4:32 AM IST

இதுதொடர்பாக அந்நாட்டு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, 84 வயதான சவுதி அரேபியாவின் மன்னர் கிங் பைசல் சிகிச்சைக்காக சிறப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அந்த சுருக்கமான அறிக்கை மேலும் விவரங்களை வழங்கவில்லை.

அண்மையில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் உள்பட, அரச குடும்ப உறுப்பினர்களுக்கு ரியாத்தில் உள்ள இந்த மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

மன்னர் சல்மான் ஜனவரி 2015 ஆம் ஆண்டு முதல் ஆட்சியில் இருக்கிறார். அவரது தந்தை மற்றும் சவுதி அரேபியாவின் நிறுவனர் மன்னர் அப்துல்அசிஸ் இறந்ததிலிருந்து ஆட்சியை வகித்த அவரது தலைமுறை சகோதரர்களின் கடைசி சவுதி மன்னராக அவர் கருதப்படுகிறார். உலகின் சிறந்த எண்ணெய் உற்பத்தியாளர்களில் ஒருவராகவும், அதன்மூலம் கிடைக்கும் மிகப்பெரிய பொருளாதாரங்களின் காரணமாகவும் , அவரது உடல்நிலை குறித்து மற்றவர்களால் உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது.

சல்மானின் ஆட்சி மெதுவான, படிப்படியான சீர்திருத்தங்களுக்கு பழக்கமான ஒரு நாட்டில் விரைவான, பெரும் மாற்றங்களால் குறிக்கப்பட்டுள்ளது. ஆட்சிக்கு வந்ததிலிருந்து, யேமன் நாட்டிற்கு எதிராக போர் மேற்கொண்டார். அண்டை நாடான கத்தார் உடனான உறவுகளைத் துண்டித்தார்.

அவர் தனது 34 வயதான மகன், முகமது பின் சல்மானுக்கு, அவரது வாரிசாக அதிகாரம் அளித்துள்ளார். கிரீடம் இளவரசரின் உறுதியான மற்றும் தைரியமான தலைமைத்துவமும், அதிகாரத்தை பலப்படுத்துவதும், சாத்தியமான போட்டியாளர்களை ஓரங்கட்டுவதும் சர்ச்சைக்குரியது.

தனது தந்தையின் ஆதரவுடன், இளவரசர் முகமது சமீபத்திய ஆண்டுகளில் ராச்சியத்தை மாற்றியமைத்து, அதை சுற்றுலாப் பயணிகளுக்குத் திறந்து, எண்ணெய் ஏற்றுமதியை நம்புவதிலிருந்து சவுதி பொருளாதாரத்தை பன்முகப்படுத்த முயற்சிக்கும்போது சமூகத்தில் பல தசாப்தங்களாக அல்ட்ரா கன்சர்வேடிவ் கட்டுப்பாடுகளை தளத்தினார்.

இவர், பேரழிவு தரும் யேமன் போரை பாதுகாப்பு அமைச்சராக மேற்பார்வையிட்டார் மற்றும் அதிகாரத்திற்கான தனது தேடலில் அரச குடும்பத்தின் உயர் உறுப்பினர்களை தன்வசம் வைத்துள்ளார்.

2018 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் வாஷிங்டன் போஸ்ட் கட்டுரையாளரும் சவுதி விமர்சகருமான ஜமால் கஷோகி கொடூரமாக படுகொலை செய்யப்பட்டபோது, இந்த கொலையில் இளவரசருக்கு தொடர்பு இருப்பதாக கூறப்பட்டது.

மன்னரின் உடல்நிலை குறித்த செய்தியைத் தொடர்ந்து ஈராக்கின் புதிய பிரதமர் முஸ்தபா அல் காதிமி சவுதி அரேபியாவுக்கு திட்டமிட்ட பயணத்தை திங்கள்கிழமைக்கு ஒத்திவைத்தார் என்று சவுதி வெளியுறவு அமைச்சர் பைசல் பின் ஃபர்ஹான் தெரிவித்தார்.

மக்கா மற்றும் மதீனாவில் இஸ்லாத்தின் புனிதமான தளங்களை மேற்பார்வையிடும் மன்னர் சல்மான், மன்னர் அப்துல்லாவின் கீழ் ஒரு இளவரசராக இருந்து பாதுகாப்பு அமைச்சராக பணியாற்றினார். அதற்கு முன்னர் 50 ஆண்டுகளுக்கும் மேலாக, அவர் ரியாத்தின் ஆளுநராக இருந்தார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.