ETV Bharat / briefs

ஸ்டாலினை சீண்டும் சரத்குமார்

கன்னியாகுமரி: ஆட்சி மாற்றம் ஏற்படும் என ஸ்டாலின் சொல்லிக் கொண்டேதான் இருப்பார். எந்த சூழ்நிலையிலும் ஸ்டாலின் முதலமைச்சராக வாய்ப்பே கிடையாது. ஆட்சி கவிழ வேண்டும் என நினைக்கும் ஒரு மனிதர் எப்படி நாட்டை ஆள முடியும் என கன்னியாகுமரியில் சரத்குமார் பேட்டியளித்துள்ளார்.

சரத்குமார் பேட்டி
author img

By

Published : Apr 14, 2019, 10:14 PM IST

கடந்த முறை போல இப்போதும் ஆதரவு தருமாறு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கேட்டுக்கொண்டதால் தான், அதிமுக - பாஜக கூட்டணிக்குப் பரப்புரை செய்வதாகச் சமக தலைவர் நடிகர் சரத்குமார் தெரிவித்தார். பாஜக வேட்பாளர் பொன். ராதாகிருஷ்ணன் அவர்களை ஆதரித்துத் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட சரத்குமார் கன்னியாகுமரியில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறிதாவது,

  • அதிமுக தலைமையிலான கூட்டணிக்கு வாக்களிக்க மக்கள் முடிவு செய்துள்ளார்கள்.
  • பல கட்சிகள் பல கொள்கை, கோட்பாடுகள், கருத்துக்கள் இருந்தாலும் ஒற்றுமையாக ஓரணியாக இணைந்து மத்தியில் ஆட்சி அமைக்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளது.
  • நாங்கள் தனித்து நின்று நான்கு, ஐந்து தொகுதிகளில் வெற்றி பெற்றாலும் தொங்கு நாடாளுமன்றம் தான் அமையும். அதனால்தான் 8 ஆண்டுகளாக இருக்கும் கூட்டணியில் தொடர்கிறோம்.
  • நாடு இப்போது இருக்கும் சூழலில் மோடி போன்ற வலிமையான பிரதமர் வரவேண்டும்.
  • சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுவீர்களா என்ற கேள்விக்கு நாளை என்ன நடக்கும் எனச் சொல்ல முடியாது என்று பதிலளித்தார்.
  • தினகரனின் மக்கள் ஆதரவு குறித்த கேள்விக்கு, கூட்டம் எல்லோருக்கும் வரும் சுதந்திர நாட்டில் கருத்துக் கேட்க மக்கள் வருவார்கள் என்றார்.
  • புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு மோடி கொடுத்த பதிலடியால் நாடு பலமாக இருப்பதாக மக்கள் நம்புகிறார்கள்.
  • குமரித் தொகுதியில் பல திட்டங்களை மத்திய அமைச்சராக இருந்து பொன். ராதாகிருஷ்ணன் செய்திருக்கிறார்.
  • வருமான வரி சோதனை எப்போது வேண்டுமானாலும் வரலாம். சட்டத்திற்கு உட்பட்டு சோதனை என்பதால் சோதனை செய்ய வருபவர்களை வரக்கூடாது என்று சொல்ல முடியாது .
  • நான் எதிர்க்கட்சியாக இல்லை என் வீட்டிலும் வருமான வரி சோதனை வந்தது. வருமான வரி சோதனை வந்தால் அதை சூழ்ச்சி, சதி என நினைக்கக்கூடாது .
  • ஆட்சி மாற்றம் ஏற்படும் என ஸ்டாலின் சொல்லிக் கொண்டேதான் இருப்பார். எந்த சூழ்நிலையிலும் முதலமைச்சராக ஸ்டாலினுக்கு வாய்ப்பே கிடையாது.
  • ஆட்சி கவிழ வேண்டும் என நினைக்கும் ஒரு மனிதர் எப்படி நாட்டை ஆள முடியும் .
  • மோடி அலை குறித்துக் கேட்ட கேள்விக்குக் கடல் என்று இருந்தால் அலை இருந்துகொண்டேதான் இருக்கும் அலைகள் ஓய்வதில்லை என்றும் மீண்டும் மோடிதான் பிரதமர் ஆவார் என்றார்.

Intro:ஆட்சி மாற்றம் ஏற்படும் என ஸ்டாலின் சொல்லிக் கொண்டேதான் இருப்பார். எந்த சூழ்நிலையிலும் ஸ்டாலின் முதலமைச்சராக வாய்ப்பே கிடையாது .ஆட்சி கவிழ வேண்டும் என நினைக்கும் ஒரு மனிதர் எப்படி நாட்டை ஆள முடியும் கன்னியாகுமரியில் சரத்குமார் பேட்டி.

Body:ஆட்சி மாற்றம் ஏற்படும் என ஸ்டாலின் சொல்லிக் கொண்டேதான் இருப்பார். எந்த சூழ்நிலையிலும் ஸ்டாலின் முதலமைச்சராக வாய்ப்பே கிடையாது .ஆட்சி கவிழ வேண்டும் என நினைக்கும் ஒரு மனிதர் எப்படி நாட்டை ஆள முடியும் கன்னியாகுமரியில் சரத்குமார் பேட்டி.

கடந்த முறை போல இப்போதும் ஆதரவு தருமாறு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கேட்டுக்கொண்டதால் பிரச்சாரம் செய்வதாக சமக தலைவர் நடிகர் சரத்குமார் கூறினார் .கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணன் அவர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்ய வந்த நடிகர் சரத்குமார் கன்னியாகுமரியில் நிருபர்களிடம் கூறியதாவது:- அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் .கன்னியாகுமரி நாடாளுமன்ற தேர்தலில் பிரச்சாரம் செய்ய வந்துள்ளேன் .அதிமுக தலைமையிலான கூட்டணிக்கு வாக்களிக்க மக்கள் முடிவு செய்துள்ளார்கள். மக்கள் ஆர்வமாக இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது .பல கட்சிகள் பல கொள்கை, கோட்பாடுகள், கருத்துக்கள் இருந்தாலும் ஒற்றுமையாக ஓரணியாக இணைந்து மத்தியில் ஆட்சி அமைக்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளது. தனித்துப் போட்டி என்ற கருத்து தொடக்கத்தில் நாங்கள் கூறியிருந்தோம். ஆனால் ஜெயலலிதா இல்லாத இந்த தேர்தலில் தொடர்ந்து உங்கள் ஆதரவை வேண்டும் என அதிமுக சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டார்கள் .நாங்கள் எங்கள் மாநில நிர்வாகிகளிடமும் மாவட்ட நிர்வாகிகளிடம் கலந்து பேசி இந்த முறை அதிமுக அணிக்கு ஆதரவு தெரிவிக்க முடிவு செய்தோம். நாங்கள் தனித்து நின்று நான்கு ,ஐந்து தொகுதிகளில் வெற்றி பெற்றாலும் தொங்கு பாராளுமன்றமே தான் இருக்கும் .அதனால்தான் 8 ஆண்டுகளாக இருக்கும் கூட்டணியில் தொடர்கிறோம். நாடு இப்போது இருக்கும் சூழலில் மோடி போன்ற வலிமையான பிரதமர் வரவேண்டும். சட்டசபைத் தேர்தலில் போட்டியிடுவீர்களா என்ற கேள்விக்கு நாளை என்ன நடக்கும் எனச் சொல்ல முடியாது என தெரிவித்தார். தினகரன் போகும் இடங்களில் கூட்டம் அதிகமாக வருவது பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்ற கேள்விக்கு கூட்டம் எல்லோருக்கும் வரும் சுதந்திர நாட்டில் கருத்து கேட்க மக்கள் வருவார்கள். வாக்களிப்பது அவர்களின் உரிமை. மத்தியில் வலுவான நல்லாட்சி வரவேண்டும் என்ற எண்ணம் மக்களிடம் இருக்கிறது .தனியாக நின்று ஒன்று இரண்டு சீட்டுகள் பெற்றால் பாரதப் பிரதமரை தேர்ந்தெடுக்க முடியாது .பெரும்பான்மை ஆட்சி அமையும் போதுதான் எந்த திட்டமாக இருந்தாலும் மக்களுக்கு சென்றடையும். மாநிலத்திலும் மத்தியிலும் ஒத்த சிந்தனை கொண்ட ஆட்சி அமைய வேண்டும். புல்வாமா தாக்குதலுக்கு பிறகு மோடி கொடுத்த பதிலடியால் நாடு பலமாக இருப்பதாக மக்கள் நம்புகிறார்கள். கன்னியாகுமரி தொகுதியில் பல திட்டங்களை மத்திய அமைச்சராக இருந்து பொன்ராதாகிருஷ்ணன் செய்திருக்கிறார். வருமான வரி சோதனை எப்போது வேண்டுமானாலும் வரலாம். சட்டத்திற்கு உட்பட்டு சோதனை என்பதால் ரெய்டு வருபவர்களை வரக்கூடாது என்று சொல்ல முடியாது .நான் எதிர்க்கட்சியாக இல்லை என் வீட்டிலும் வருமான வரி சோதனை வந்தது. வருமான வரி சோதனை வந்தால் அதை சூழ்ச்சியை சதி என நினைக்கக்கூடாது .ஆட்சி மாற்றம் ஏற்படும் என ஸ்டாலின் சொல்லிக் கொண்டேதான் இருப்பார். எந்த சூழ்நிலையிலும் முதலமைச்சராக ஸ்டாலினுக்கு வாய்ப்பே கிடையாது. ஆட்சி கவிழ வேண்டும் என நினைக்கும் ஒரு மனிதர் எப்படி நாட்டை ஆள முடியும் .வாக்களித்த மக்கள் ஐந்தாண்டு ஆட்சி சிறப்பாக இருக்க வேண்டும் என்றுதானே வாக்களித்திருக்கிறார்கள் .அப்புறம் இவர் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வராக எனக் கேட்கிறார்கள். அவர் மக்களால் எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் தானே. எம்எல்ஏக்கள் சேர்ந்துதானே முதல்வர் தேர்ந்தெடுத்தார்கள் மோடி அலை குறித்து கேட்ட கேள்விக்கு கடல் என்று இருந்தால் அலை இருந்துகொண்டேதான் இருக்கும் அலைகள் ஓய்வதில்லை என்று மீண்டும் மோடிதான் பிரதமர் ஆவார் என்றார் அவர்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.