தமிழ்நாடு முதலமைச்சரின் அறிவுரையின்படி, கரோனா தொற்று தடுப்புப் பணிகளை மேற்கொள்வதற்காக மாநகராட்சி ஆணையாளர் ரெ.சதீஷிடம் சேலம் தெற்கு சட்டப் பேரவை உறுப்பினர் ஏ.பி.சக்திவேல், தொகுதி மேம்பாட்டு வளர்ச்சி நிதியிலிருந்து ரூ.25 லட்சத்திற்கான காசோலையினை வழங்கினார்.
இதுகுறித்து ஆணையாளர் சதீஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "சட்டப் பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு வளர்ச்சி நிதியிலிருந்து வழங்கப்பட்டுள்ள ரூ.25 லட்சம் நிதியின் மூலம் சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் செயல்படும் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு தேவையான மருத்துவ உபகரணங்கள், கரோனா தொற்று தடுப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள களப்பணியாளர்களுக்கு தேவையான பாதுகாப்பு கவச உடைகள், முகக்கவசங்கள், கிருமி நாசினிகள், கையுறைகள் உள்ளிட்டவைகள் கொள்முதல் செய்யப்படும்" எனத் தெரிவித்துள்ளார்.