ETV Bharat / briefs

சலை எருது உயிரிழப்பு: பொதுமக்கள் அஞ்சலி! - Sal bull death Karur

கரூர்: உயிரிழந்த சலை‌ எருதுவிற்குப் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.

Sal bull death Public tribute
Sal bull death Public tribute
author img

By

Published : Sep 8, 2020, 8:25 AM IST

கரூர் மாவட்டம் குளித்தலை வட்டத்திற்குள்பட்ட தோகைமலை அருகே சிவாயம் ஊராட்சி அலங்காரப்பட்டி கிராமத்திற்குச் சொந்தமான முப்பனக்கட்சி மந்தையின் சலை எருது என்றழைக்கப்படும் 24 வயது உடைய கோயிலுக்குச் சொந்தமான சுவாமி எருதை பொதுமக்கள் பராமரித்துவந்தனர்.

இந்தச் சலை எருது பல்வேறு மாலை தாண்டும் போட்டிகளில் கலந்துகொண்டு, கட்டில் பீரோ, தங்கப் பதக்கங்களை வென்றுள்ளது. இந்நிலையில், வயது மூப்பால் கடந்த ஒரு ஆண்டு காலமாக உடல்நிலை சரியில்லாமல் அவதியுற்று வந்தது.

இதனால், நேற்று உடல்நிலை சரியில்லாமல் உயிரிழந்தது. இதனால் அப்பகுதியில் உள்ள மக்கள் மாட்டுக்கு மஞ்சள் கதராடை அணிவித்து அலங்காரம் செய்து அஞ்சலி செலுத்தினர்.

மேலும், கரூர் திருச்சி திண்டுக்கல் போன்ற மாவட்டங்களில் 14 மந்தைகளுக்கு தகவல் அளித்தனர். அப்பகுதியில் உள்ள மக்களும் நேரில் வந்து எருதுக்கு அஞ்சலி செலுத்தினர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.