உத்தரபிரதேச மாநிலத்தில் பன்வாரி தோலா என்ற கிராமத்தை சேர்ந்த நேஹா, ஜோதி இருவரும் சலூன் கடை ஒன்றை நடத்தி வருகின்றனர். பொதுவாக, சலூன் கடைகளை ஆண்கள் மட்டுமே நடத்தி வரும் இந்த சமுதாயத்தில், பெண்கள் சலூன் கடையை நடத்தி வருவது சற்று ஆச்சர்யமாகதான் இருக்கிறது.
முதலில் இந்தக் கடையை இவர்களது தந்தைதான் நடத்தி வந்துள்ளார். ஆனால், 2014இல் அவர் படுத்தப்படுக்கையானதால், தந்தையின் பணிச்சுமையை இவர்கள் எடுத்துக்கொண்டு, சலூன் கடையை நடத்தி வருகின்றனர். இதில், கிடைக்கும் வருவாய் மூலம் தங்களது குடும்பத்தின் பட்ஜெட்டையும் பார்த்துக் கொள்வது மட்டுமின்றி, தந்தையின் மருத்துச் சிகிச்சை செலவையும் அவர்கள் கவனித்து வருகின்றனர்.
பல்வேறு பாலின சமுகவேறுபாட்டையும் தகர்ந்தெறிந்த இவர்கள் தங்களது கடைக்கு பார்பர்ஷாப் கேர்ஸ் என்று பெயரையும் சூட்டினர். பிரபல ஜில்லெட் பிளேட் நிறுவனமான ஜில்லெட் இந்தியா இவர்கள் செய்யும் பணிக் குறித்து வீடியோ ஒன்றை யூடியூப்பில் வெளியிட்டது. நல்ல வரவேற்பு பெற்ற இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகியும் வருகிறது.
இந்நிலையில், இந்த ஊழைக்கும் இந்த இளம் பெண்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக, இந்திய ஜாம்பவான் வீரர் சச்சின் டெண்டுல்கர் இவர்களது கடைசிக்கு சென்றது மட்டுமின்றி, ஷேவிங்கும் செய்துக் கொண்டார். சச்சினின் வருகைக் கண்டு நேஹா, ஜோதி இருவரும் பிரமித்துப் போயினர்.
![Sachin Tweet](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/3194485_tweet.jpg)
இவர்களிடம் ஷேவிங் செய்துக் கொண்ட சச்சின் தனது இன்ஸ்டாகிராமில், இதற்கு முன் வேறு யாரிடமும் நான் ஷேவிங் செய்து கொண்டதே இல்லை, அந்த சாதனை தற்போது முறியடிக்கப்பட்டுள்ளது என பதிவிட்டார். மேலும், பார்பர்ஷாப் கேர்ஸ் சலூன் கடையை நடத்தி வரும் இவர்களை சந்தித்து எனக்கு மிகவும் பெருமையாக இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
![ஜில்லெட் இந்தியா நிருவனம் சார்பில் உதவித்தொகை வழங்கினார் சச்சின்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/3194485_sachin.jpg)
பிறகு சச்சின், இவர்களுக்கு படிப்பு மற்றும் தொழில்சார்ந்த செலவிற்காக, ஜில்லெட் இந்தியா சார்பில் 7 லட்சம் ரூபாய் உதவித்தொகை வழங்கினார். நேஹா, ஜோதி இருவரிடமும் சச்சின் ஷேவிங் செய்துக் கொண்ட புகைப்படம் தற்போது இன்ஸ்டாகிராமில் 7 லட்சத்துக்கும் அதிகமான லைக்குகளை பெற்று வருகிறது.