ETV Bharat / briefs

மாவட்ட நிர்வாகத்தின் அலட்சியத்தால் கோவிட்-19 பரவல் உச்சம் தொடும் அபாயம்!

author img

By

Published : Jul 3, 2020, 3:07 PM IST

தேனி : மருத்துவமனை நிர்வாகத்தின் அலட்சியத்தால் கம்பம் பகுதியில் நூற்றுக்கணக்கானோருக்கு கோவிட்-19 தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மாவட்ட நிர்வாகத்தின் அலட்சியத்தால் கோவிட்-19 பரவல் உச்சத்தொடும் அபாயம்!

உலகளாவிய பெருந்தொற்றுநோயான கோவிட்-19 பாதிப்பு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் மூன்றாம் கட்ட நிலையை அடைந்து, வேகமாகப் பரவிவருகிறது. இதைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர அமல்படுத்தப்பட்ட ஊரடங்கில் தளர்வளிக்கப்பட்டதை அடுத்து பல்வேறு மாவட்டங்களில் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, தேனி மாவட்டத்தில் கோவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், கம்பம் பகுதியைச் சேர்ந்த முதியவர் ஒருவருக்கு மூன்று நாள்களாக காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் இருந்துவந்ததை அடுத்து, அவருக்கு சளி ரத்த மாதிரிகள் நாகை அரசு மருத்துவமனையில் எடுக்கப்பட்டு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து ஜூன் 30ஆம் தேதியன்று மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த அவர், மறுநாள் (ஜூலை 1) சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

இதையடுத்து அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. சடலத்தை பெற்றவர்கள் அவர்களது மத வழக்கப்படி சடங்குகள் செய்து கம்பம் பள்ளிவாசலில் உள்ள அடக்க ஸ்தலத்தில் நேற்றிரவு அடக்கம் செய்யதனர்.

இதனிடையே இறந்தவரின் பரிசோதனை முடிவு இன்று வெளியானதில், அவருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் அலட்சியத்தால் கரோனா நோய் பாதிக்கப்பட்டு இறந்தவரின் இறுதிச் சடங்கில் பங்கேற்ற ஏராளாமானோருக்கும் நோய்த் தொற்று உண்டாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, கோவிட்-19 பாதிப்பால் உயிரிழந்த முதியவரின் குடும்பத்தினர் அனைவரும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டு, சுகாதாரத்துறையின் கண்காணிக்கப்பில் வைக்கப்பட்டுள்ளனர். அவரது குடியிருப்பு பகுதி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு தூய்மைப் பணியாளர்கள் மூலம் துப்புரவு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

மேலும், அவருடைய இறுதி நிகழ்வில் பங்கேற்றவர்கள் குறித்த தகவல்களை மாவட்ட நிர்வாகம் சேகரித்து வருவதாகவும், அவர்கள் அனைவரும் கண்காப்பிற்குள் கொண்டுவரப்பட உள்ளதாகவும் அறியமுடிகிறது.

தேனி மாவட்டத்தில் இதுவரை 801 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டும், 191 பேர் குணமடைந்து வீடு திரும்பியும் உள்ளனர். தற்போது தேனி அரசு மருத்துவமனையில் உள்ள கரோனா சிறப்பு சிகிச்சைப் பிரிவில் 606 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.