கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டுமென அரசு அறிவுறுத்தி உள்ளது. அதனைப் பின்பற்றாதவர்களுக்கு மாவட்ட அலுவலர்கள் அபராதம் விதித்துவருகின்றனர்.
இந்நிலையில் திருநின்றவூர் பேரூராட்சியில் கரோனா தொற்றால் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு பணிபுரியும் தூய்மைப் பணியாளர்கள் முறையாக முகக்கவசம் இன்றியும் கையுறைகள் இன்றியும் தூய்மைப் பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.
இதனால் தூய்மைப் பணியாளர்களுக்கு கரோனா தொற்று பரவும் இடர் உள்ளது. இவர்கள் மூலமாக அவர்களது குடும்பத்தினர்களுக்கும் கரோனா பரவும் சூழல் உருவாகியுள்ளது.
எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கைவைத்துள்ளனர்.