ETV Bharat / briefs

கார்ட்டூனிஸ்ட் வர்மாவை கைது செய்ய வேண்டி கோரிக்கை மனு!

author img

By

Published : Jul 16, 2020, 3:01 AM IST

திருநெல்வேலி: மதக்கலவரத்தைத் தூண்டும் கார்ட்டூனிஸ்ட் வர்மாவை குண்டர் சட்டத்தில் கைது செய்யக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் இஸ்லாமிய அமைப்பினர் மனு அளித்துள்ளனர்.

Request Petition to arrest cartoonist Verma

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் திருநெல்வேலி மாவட்ட உறுப்பினர்கள் நேற்று (ஜூலை 15) மாநகர காவல் ஆணையர் தீபக் தாமோரிடம் மனு ஒன்றை அளித்தனர்

இதுகுறித்து மனுவில் கூறியதாவது; 'தமிழ்நாடு மதக்கலவரம் இல்லாத அமைதிப் பூங்காவாக திகழ்கிறது. கார்ட்டூனிஸ்ட் வர்மா என்பவர் சட்டம் ஒழுங்கை கெடுத்து, பொது அமைதியை சீர்குலைக்கும் வகையில் தொடர்ந்து தனது முகநூல் பக்கத்தில் கருத்துக்களை வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் இஸ்லாமியர்கள் உயிருக்கும் மேலாக மதிக்கும் நபிகள் நாயகம் குறித்து கார்ட்டூன் வெளியிடப் போவதாக அறிவித்தார். இதனால் ஏற்பட்ட பதற்றத்தைத் தொடர்ந்து வர்மா கைது செய்யப்பட்டு சிறையில் அடைத்தாலும் கூட,தொடர்ந்து சட்டத்தை மீறி, சில நபர்கள் மூலம் மதக்கலவரத்தை தூண்டும் வகையில் வர்மா செயல்பட்டு வருகிறார்.

அதன்படி சமீபத்தில் சில நபர்கள் மூலம் கார்ட்டூன் ஒன்றை வெளியிட்டுள்ளார். அது மதக் கலவரத்தை தூண்டும் வகையில் அமைந்து உள்ளதால் மக்களிடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது. எனவே இதுபோன்று தொடர்ந்து செயல்படும் கார்ட்டூனிஸ்ட் வர்மா மீது கடும் நடவடிக்கை எடுத்து குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்' எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.