கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் ராகுல் காந்தியின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதில், கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த குமார் கலந்துகொண்டு கேக் வெட்டி விழாவை கொண்டாடினார். இந்த நிகழ்வில் 300க்கும் மேற்பட்ட ஏழை எளியோருக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. இதில், ஏராளமான காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
அதன்பின், லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் இந்தியா - சீனா ராணுவ வீரர்களுக்கு இடையே நடந்த மோதலில் உயிரிழந்த இந்திய வீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.