நடைபெறவிருக்கும் மக்களவைத் தேர்தலில் ராகுல் காந்தி உத்தரப்பிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் போட்டியிடுகிறார். இருந்தும் தென்னிந்தியாவிலும் போட்டியிட வேண்டும் என தென்மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சியினர் கோரிக்கைவைத்தனர். இதனையடுத்து, கேரளாவில் உள்ள வயநாட்டில் போட்டியிடப்போவதாக ராகுல் காந்தி அறிவித்தார்.
இது குறித்து ராகுல் காந்தி கூறுகையில், ’தென்னிந்திய மக்களுடன் நான் இருக்கிறேன் என்பதை வெளிப்படுத்தவே வயநாடு தொகுதியில் போட்டியிடுகிறேன்’ என தெரித்தார்.
இந்நிலையில் நாளை ராகுல் காந்தி வயநாட்டில் வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளார்.