காதல் திருமணம் செய்த உடுமலை சங்கர் என்பவரை ஆணவ படுகொலை செய்த வழக்கில் சங்கர் மனைவியின் தந்தை மற்றும் அவரது உறவினர்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பு நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டனர்.
இந்நிலையில் உடுமலை சங்கர் ஆணவக்கொலை வழக்கை முறையாக அரசு நடத்தவில்லை என பல்வேறு கட்சித் தலைவர்கள் அரசை கடுமையாக விமர்சனம் செய்தனர்.
மேலும் உடுமலை சங்கர் ஆணவக்கொலை வழக்கை உடனடியாக மேல்முறையீடு செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே முக்குராந்தல் பகுதியில் புதிய தமிழகம் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் உடுமலை சங்கர் ஆணவ கொலை வழக்கை முறையாக நடத்த அரசை கண்டித்து கண்டன முழக்கங்கள் எழுப்பினர். மேலும் இக்கொலை வழக்கை விரைவாக மேல்முறையீடு செய்ய வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அரசை வலியுறுத்தினார்கள்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 50க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: கரோனா பாதித்த இடங்களை தனிமைப்படுத்த எதிர்ப்பு: வியாபாரிகள் சாலை மறியல்