ஆந்திராவிலிருந்து மகாராஷ்ராவின் பல்வேறு பகுதிகளுக்குப் போதைப்பொருள் கடத்தப்படுவதாகப் புனே சுங்க போதைப்பொருள் பிரிவுக்குத் தகவல் கிடைத்தது.
இதனடிப்படையில், அலுவலர்கள் நால்தர்க் - சோலாப்பூர் சாலையில் தீவிர வாகன சோதனை மேற்கொண்டனர். இதில் சந்தேகத்திற்கிடமான வாகனங்களைப் பின்தொடர்ந்து அலுவலர்கள் சோதனை செய்தனர்.
இந்தச் சோதனையில், இரண்டு வாகனங்களில் வந்த நான்கு நபர்களிடமிருந்து மறைத்துவைக்கப்பட்டிருந்த 868 கிலோ கஞ்சா, 7.5 கிலோ சரஸ் பறிமுதல்செய்யப்பட்டன.
பறிமுதல்செய்யப்பட்ட போதைப்பொருள்களின் மதிப்பு 2.10 கோடி ரூபாய் என அலுவலர்கள் தெரிவித்தனர். பின்னர் அலுவலர்கள் போதைப்பொருள் கடத்தலுக்குப் பயன்படுத்திய இரு வாகனங்களையும் பறிமுதல்செய்து நான்கு பேரை கைதுசெய்தனர்.