புதுச்சேரியில் கரோனா தடுப்பு குறித்த ஆலோசனைக் கூட்டம் சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள சுகாதாரத்துறை அமைச்சர் அலுவலகத்தில் நேற்று (செப்.4) நடைபெற்றது. அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தலைமை தாங்கிய இக்கூட்டத்தில், வளர்ச்சி ஆணையம் அன்பரசு, சுகாதாரத்துறை செயலர் அருண், இயக்குநர் மோகன், சுகாதாரதுறை அலுவலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில், கரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதால் முதியோர், குழந்தைகள், கர்ப்பிணிகளுக்கு வீடு தேடிச் சென்று பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டது. இதற்காக தொற்று அதிகம் உள்ள 25 பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளன. இந்த பகுதிகளுக்கு வீடு வீடாக சென்று கரோனா உள்ளதா என மாதிரி சேகரிக்கும் முகாமை சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தொடங்கி வைத்தார்.
பின்னர், முதற்கட்டமாக இன்று (செப்.5) குறிஞ்சி நகர், மவுடுபட்டு பகுதிகளில் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் வீதி வீதியாகச் சென்று மக்களை சந்தித்து பரிசோதனைக்கு அழைத்தார்.