ETV Bharat / briefs

கரோனா பாதிப்பு உயர்கிறது, எச்சரிக்கும் மாவட்ட ஆட்சியர்! - புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் அருண்

புதுச்சேரி: கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை உயர்வதால் பொதுமக்கள் எச்சரிக்கையாகவும் பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அருண் கேட்டுக் கொண்டுள்ளார்.

கரோனா எண்ணிக்கை உயர்கிறது மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்

author img

By

Published : Jun 2, 2020, 3:45 AM IST

தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் அருண் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர், “புதுச்சேரியில் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை உயர்கிறது. மக்கள் எச்சரிக்கையாகவும் பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும்.

புதுச்சேரியின் சுற்றுலா தலமான கடற்கரை சாலை, படகு துறை, அருங்காட்சியகம், தாவரவியல் பூங்கா ஆகிய சுற்றுலா தலங்கள் அனைத்தும் திறந்து இருக்கும். இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு தொடரும்” என்றார்.

மேலும், “ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்ட போது காந்தி வீதியில் இருந்த காய்கறி விற்பனை அங்காடி புதுச்சேரி புதிய பேருந்து நிலையத்தில் மாற்றப்பட்டிருந்தது.

தற்போது ஊரடங்கு தளர்வின் காரணமாக புதுச்சேரி பேருந்து நிலையத்தில் இயங்கி வந்த காய்கறி அங்காடி புதன்கிழமை முதல் பெரிய மார்க்கெட்டில் மீண்டும் இயங்கும்” என்று கூறினார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.