புதுச்சேரி மாநிலம் வில்லியனூர் கணுவாப்பேட் முருகர் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ராம் (எ) ராம்குமார். இந்த இளைஞர் புதுவையில் உள்ள தனியார் காபி ஷாப்பில் பணிபுரிந்து வந்துள்ளார்.
பணிமுடித்து நேற்று இரவு (செப்.9) மணவெளி திருக்காஞ்சி சாலை வழியாக வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அந்தப் பகுதியில் அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டார்.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த வில்லியனூர் காவல்துறையினர், முன்விரோதமா? அல்லது வேறு ஏதாவது காரணத்தால் கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க : ரவுடியை ஓட ஓட வெட்டிக் கொன்ற சம்பவம்: உறைய வைக்கும் சிசிடிவி காட்சி!