இது தொடர்பாக புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி வெளியிட்டுள்ள வாட்ஸ்அப் செய்திக் குறிப்பில், "கரோனா வார்டில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகள் சிலர் தலைமறைவாகிவிடுகின்றனர் என மருத்துவமனையில் இருந்து புகார்கள் வந்துள்ளன.
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளி ஒருவர் மதுக்கடைக்குச் சென்று மது அருந்திவிட்டு, மாலை தனியாக மீண்டும் வார்டுக்கு வந்துள்ளார். இந்த மாதிரி சூழலை எவ்வாறு கையாள்வது என்று மருத்துவர் கேள்வி எழுப்புகிறார்.
சிகிச்சையில் இருக்கும்போது மது அருந்தி வருபவரின் சுய ஒழுக்கம் மோசமானது. மக்கள் தொடர்ந்து தகுந்த இடைவெளியைக் கடைப்பிடித்தல், முகக்கவசம் அணியாதது, தேவையில்லாமல் பொது இடங்களில் சுற்றுவது போன்ற விஷயங்களை மீறினால், வரும் செப்டம்பர் நடுப்பகுதியில் புதுச்சேரியில் ஆயிரம் பேருக்கு கரோனா தொற்று ஏற்படலாம். இப்போது இருக்கும் கரோனா தொற்று பாதிப்பு இரட்டிப்பு விகிதமாகிவிடும்' என்று தெரிவித்துள்ளார்.