பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாள் நாடு முழுவதும் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. பிரதமர் மோடியின் 70ஆவது பிறந்தநாளையொட்டி ஒருவாரம் சேவை வாரமாகக் பாஜக தொண்டர்கள் கொண்டாடுகின்றனர்.
அதில் ஒவ்வொரு மாவட்டத்திலும் 70 இடங்களில் அன்னதானம் வழங்குதல், சுகாதாரப் பணிகள், மரம் நடுதல் போன்ற சேவைகள் செய்யப்பட்டுள்ளன. அதன் ஒரு பகுதியாக கன்னியாகுமரி மாவட்டத்திலும் பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
குறிப்பாக பாஜக முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தலைமையில் தொண்டர்கள் நாகர்கோவிலில் பால்குடம் எடுத்து ஊர்வலமாக சென்று மோடி நலமுடன் வாழ நாகராஜகோயிலில் சிறப்பு வழிபாடு நடத்தினர். பின்னர் அவர்கள் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர்.