ETV Bharat / briefs

ஏழை எளியோருக்கு உணவு வழங்கிய பொள்ளாச்சி போலீஸ்! - பொள்ளாச்சி மேற்கு நகர காவல் துறையினர்

கோவை: பொள்ளாச்சி ‌காவல் துறையின் சார்பில் ஏழை எளிய மக்களுக்கு முகக்கவசம், கிருமி நாசினி, உணவு, குடிதண்ணீர் உள்ளிட்டவை வழங்கப்பட்டது.

Pollachi Police Provide Food For Poor People's

author img

By

Published : Aug 4, 2020, 5:43 AM IST

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் காவல் கண்காணிப்பாளர் அருள்ராசு உத்தரவின்பேரில், பொள்ளாச்சி காவல் துணை கண்காணிப்பாளர் கே.ஜி. சிவக்குமார் மேற்பார்வையில் நகர மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் வைரம் தலைமையில் உதவி ஆய்வாளர்கள் கார்த்திக், குமார், சக்தி, வடிவேல், தலைமை காவலர் ராஜ்குமார், முதல் நிலை காவலர்கள் கல்யாணசுந்தரம், நாக மாணிக்கம் ஆகியோர் அடங்கிய குழு பொள்ளாச்சி மார்க்கெட், நேதாஜி சாலை, கிழமேற்குராஜா மில், புதிய பஸ் நிலையம் ஆகிய பகுதியிலுள்ள ஏழை எளிய மக்களுக்கு முகக்கவசம், கிருமிநாசினி, குடிதண்ணீர், மதிய உணவு ஆகியவைகள் வழங்கினர்.

இதையடுத்து, மேற்கு காவல் நிலைய சரகம் குமரன் நகர் பகுதியில் சுற்றித்திரிந்த ராஜ்குமார் (37) என்ற மனநிலை பாதிக்கப்பட்ட இளைஞரை காவல் துறையினர் மீட்டு விசாரணை நடத்தினர். அதில், அந்த இளைஞர் கடந்த வெள்ளிக்கிழமை கிணத்துக்கடவுவில் உள்ள சரணாலயத்தில் இருந்து தப்பித்து வந்தது தெரியவந்தது.

பின்னர் மனநிலை பாதிக்கப்பட்ட இளைஞர் குறித்து சரணாலயத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்களுடன் அனுப்பி வைத்தனர்.

இது குறித்து துணை கண்காணிப்பாளர் கே.ஜி சிவக்குமார் கூறுகையில், "கரோனா தொற்று காரணமாக பொள்ளாச்சி, சுற்றுவட்டார சாலை ஓரம் வசிக்கும் பொதுமக்கள், தூய்மைப் பணியாளர்களுக்கு மாவட்ட கண்காணிப்பாளர் அரா அருளரசு உத்தரவின் பேரில் அரிசி, மளிகை பொருள்கள், உணவு‌‌ உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. பொதுமக்களுக்கு கரோனா தொற்று குறித்து விழிப்புணர்வு ஏற்ப்படுத்தப்படுகிறது" எனத் தெரிவித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.