கன்னியாகுமரி மாவட்டத்தில் கரோனா பாதிப்பு காரணமாக 144 தடை உத்தரவு தொடர்ந்து அமலில் உள்ளது.
இதனால் அத்தியாவசியப் பொருள்கள் வாங்க மட்டுமே பொதுமக்கள் வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு வீட்டை விட்டு வெளியே செல்லும் போது பொதுமக்கள் கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
எனினும் போதிய விழிப்புணர்வில்லாத காரணத்தால் பொதுமக்கள் தொடர்ந்து முகக்கவசம் அணியாமல் சாலைகளில் சென்றபடி இருந்தனர்.
இந்நிலையில் அஞ்சுகிராமம் காவல் நிலைய காவல்துறையினர் சார்பில் அஞ்சுகிராமம் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பகுதியில் பொதுமக்களுக்கு முகக்கவசம் அணிவதன் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இதன் ஒரு பகுதியாக மயிலாடி பகுதியில் முகக் கவசம் அணியாமல் சாலைகளில் வந்த பொது மக்களை பிடித்து அவர்களுக்கு முகக்கவசம் அணிவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி பின்பு இலவசமாக முகக் கவசங்களை வழங்கினார்.
இதையும் படிங்க: ராயபுரத்தில் ஆறாயிரத்தை நெருங்கும் கரோனா பாதிப்பு