கன்னியாகுமரி மாவட்டம் சுவாமிபுரத்தில் நேற்று (ஆகஸ்ட் 03) காலை திடீரென குடியிருப்புப் பகுதிக்குள் விஷப்பாம்பு ஒன்று புகுந்தது. பாம்பைக் கண்ட பொதுமக்கள் அச்சத்துடன் அங்கும் இங்குமாக அலறியடித்து ஓடத் தொடங்கினர். இதனால் அங்கு சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்து சம்பவ இடம் வந்த கன்னியாகுமரி தீயணைப்புத் துறையினர், ஒருமணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்த விஷப்பாம்பை பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.