திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள புதூர் ஊராட்சிக்கு உள்பட்ட பாலசுப்பிரமணியம் நகரில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இப்பகுதியில், கடந்த நான்காண்டுகளாக சாலை வசதி இல்லாமல் சாலை குண்டும் குழியுமாக காட்சி அளிப்பதாகவும், பொதுமக்கள் சார்பில் பலமுறை ஊராட்சி ஒன்றிய அலுவலர்களிடம் மனு கொடுத்தும், பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் இதுவரை எந்த சாலை வசதியும் செய்யவில்லை எனவும் பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், இன்று 50-க்கும் மேற்பட்ட வீடுகளில் அப்பகுதி மக்கள் கறுப்புக் கொடியை கட்டி நூதன போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் விபத்து ஏற்பட்டால் பாலசுப்ரமணியம் நகருக்கு ஆம்புலன்ஸ், தீயணைப்பு துறை வாகனம் வருவதில்லை என பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.