சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில்,
"தமிழ்நாட்டில் தனித்துப் போட்டியிட்டால்தான் பாஜகவின் எதிர்காலம் தெரியும். தனியாக நிற்பதற்கு பாஜகவுக்கு போதிய பலம் இருக்க வேண்டும். இதற்கு தமிழக பாஜக பொறுப்பாளர் ராஜினாமா செய்வதோடு மட்டுமல்லாமல், சினிமாக்காரர்கள் பின்னால் செல்லும் கொள்கையை மாற்றிக் கொள்ள வேண்டும்.
நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் மும்மொழிக் கொள்கை இருக்கும்போது, தமிழ்நாட்டில் ஏன் இருக்கக் கூடாது? அண்ணா காலத்தில் மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் இரு மொழிக் கொள்கைக்கு ஒப்புதல் அளித்து இருக்கலாம், ஆனால் அதற்கு சட்டத்தில் இடமில்லை.
தமிழ்நாட்டில் தண்ணீர் பிரச்னையை தீர்க்க கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை தவிர வேறு வழியே இல்லை. அதேபோல் நீண்ட காலமாக அரசியலுக்கு வருவதாக ரஜினி சொல்லிக் கொண்டு இருப்பது நாடகம் போல் உள்ளது. பாஜகவுக்கு ஆதரவு அளிக்கும் நிலைப்பாட்டில் அவர் இருக்கிறார். இல்லையென்றால் அவர் பாஜகவின் கொள்கைகளை ஆதரிக்க வேண்டும்" என்றார்.