ETV Bharat / briefs

'திருப்பத்தூரில் கரோனாவால் ஒரு உயரிழப்பு கூட ஏற்படவில்லை'- ஆட்சியர் சிவனருள்! - கரோனா எண்ணிக்கை

திருப்பத்தூர்: கரோனா தொற்றால் இதுவரை ஒரு உயிரிழப்பு கூட ஏற்படவில்லை, எனினும் கரோனாவால் உயிரிழப்பு ஏற்பட்டதாக வதந்தி பரவி வருவதாக மாவட்ட ஆட்சியர் சிவனருள் தெரிவித்துள்ளார்.

திருப்பத்தூரில் கரோனாவால் ஒரு உயரிழப்பு கூட ஏற்படவில்லை'- ஆட்சியர் சிவனருள்!
Thirupathur death cases
author img

By

Published : Jul 9, 2020, 1:52 AM IST

திருப்பத்தூர் வாணியம்பாடியில் கரோனா தடுப்பு பணிகளை திடீர் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் சிவனருள், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வணிகர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறுகையில், “திருப்பத்தூர் மாவட்டத்தில் கரோனா தடுப்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகிறது.

இந்த மாவட்டத்தில் இதுவரை கரோனாவால் 327 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 138 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும், 189 பேர் திருப்பத்தூர், நாற்றம்பள்ளி, வாணியம்பாடி, ஆம்பூர் ஆகிய மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

வாணியம்பாடி பகுதிகளில் கரோனாவால் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் பெரியபேட்டை உள்பட 20 வார்டுகளில் முழுக்கவனம் செலுத்தி, நாள் ஒன்றிற்கு ஆறு மருத்துவக் குழுவுடன் ஆறு முறை மருத்துவ சிகிச்சை முகாம், கிருமிநாசினி தெளிக்கும் பணிகள் உள்பட அனைத்து தடுப்பு பணிகளையும் தீவிரப்படுத்தியுள்ளோம்.

இதுவரை மாவட்டம் முழுவதும் 20 ஆயிரத்து 526 கரோனா பரிசோதனைகள் எடுக்கப்பட்டுள்ளது. இதில் 327 பேருக்கு மட்டுமே கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் காய்கறி கடைகள், மருந்துக் கடைகள், வணிக நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் அதில் யாருக்கும் தொற்று இல்லை என்று முடிவுகள் வந்துள்ளது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் இதுவரை கரோனாவால் யாரும் உயிரிழக்கவில்லை. எனினும் சிலர், கரோனாவால் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக வதந்திகளை பரப்பி வருகின்றனர்.

மேலும் வெளி மாவட்டம், வெளிமாநிலங்களில் இருந்து இ-பாஸ் உடன் வருபவர்களுக்கு சோதனை சாவடியிலேயே கரோனா பரிசோதனை செய்யப்பட்டு அதன் அருகிலேயே தனிமைப் படுத்தப்படுகின்றனர். இ-பாஸ் இல்லாமல் வருபவர்களை திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றனர்" எனக் கூறினார்.

இதையும் படிங்க: 'செல்போனில் வரும் இ-மெயிலை நம்பி ஏமாற வேண்டாம்'- காவல் துணை ஆணையர் எச்சரிக்கை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.