உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் நைஜீரிய நாட்டைச் சேர்ந்த நபர் ஒருவர் தனது மூன்று வயது பெண் குழந்தையை அடித்து கொலை செய்தார்.
பின்பு, இரண்டாவது மாடியிலிருந்து அவர் குழந்தையை கீழே வீசினார். இச்சம்பவம் குறித்து குழந்தையின் தாயார் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர், ரத்த வெள்ளத்தில் கிடந்த குழந்தையை மீட்டு உடற்கூறாய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இதையடுத்து, குழந்தையின் தந்தையை கைது செய்த காவல் துறையினர், இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.