சென்னை, மயிலாப்பூரிலுள்ள பொன்னம்பல வாத்தியார் தெருவில் அமைந்துள்ளது ஜன்னல் கடை. நாசியைத் துளைக்கும் பஜ்ஜி வாசனையுடன் காலையும் மாலையும் பரபரப்பான வியாபாரம் இந்தக் கடையில் மொத்தமே ஒரு ஜன்னல் மட்டும்தான். அதனால்தான் இந்தக் கடைக்கு ஜன்னல் பஜ்ஜி கடை என்ற பெயர் வந்தது.
இங்கு உட்கார பெஞ்சு, சாப்பிட மேசை, பரிமாற ஆள் என எதுவும் கிடையாது. இந்தக் கடையின் உரிமையாளர் ரமேஷ் என்ற சிவ ராமகிருஷ்ணன்(58). இவர் கடையில் தயாரிக்கப்படும் பஜ்ஜி, வடை, போண்டா, மிளகாய் பஜ்ஜி ஆகியவை மிகுந்த சுவை மிகுந்ததாய் இருக்கும்.
வேலை நிமித்தாக மயிலாப்பூர் செல்பவர்கள் இங்கு சென்று பஜ்ஜி சாப்பிடாமல் திரும்பிவர மாட்டார்கள் என்று சொல்லும் அளவிற்குப் பெயர்பெற்றது ஜன்னல் பஜ்ஜி கடை. இந்நிலையில், கடையின் உரிமையாளர் ரமேஷ் கரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். ஆனால், இன்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.