ETV Bharat / briefs

பொய் வழக்கு பதிவு: காவல் ஆய்வாளரை கண்டித்து பெண்கள் ஆர்ப்பாட்டம்

author img

By

Published : Jul 3, 2020, 5:09 PM IST

திருவாரூர்: முத்துப்பேட்டையில் பொய் வழக்கு பதிவு செய்ததாக கூறி காவல் ஆய்வாளரை கண்டித்து பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் .

பொய் வழக்கு பதிவு செய்ததாக காவல் ஆய்வாளரை கண்டித்து பெண்கள் ஆர்ப்பாட்டம்

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஒன்றியத்திற்க்குள்பட்ட நாச்சிகுளம் பகுதியில் இயங்கி வரும் ரன்வே ஹேட்டல் உரிமையாளர் சபீருக்கும் தேவேந்திரகுல இளைஞர்களுக்கும் இடையே கடந்த 13 ஆம் தேதி மோதல் ஏற்பட்டது.

இதனைத்தொடர்ந்து அந்தப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் 10 பேர் மீது பொய் வழக்கு பதிவு செய்தும், அவர்கள் மீது குண்டர் சட்டத்தினை பதிவு செய்வதற்கு, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பிடம் லஞ்சம் பெற்று கொண்டு முத்துப்பேட்டை காவல் ஆய்வாளார் ராஜேஷ் பழிவாங்கும் நோக்கத்தோடு வழக்கு பதிவு செய்யப்பட்ட ஆரியளுர் கிராமத்தில் உள்ள 10 நபர்களுடைய வீடுகளுக்கு நல்லிரவு நேரங்களில் சென்று அத்துமீறி தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது..

மேலும் காவல் ஆய்வாளர் ராஜேஷ் இரவு நேரங்களில் பெண் காவலர்கள் இல்லாமல் பெண்களை விசாரணை என்று கூறி அழைத்து வந்து ஒரு நாள் முழுவதும் காவல் நிலையத்தில் வைத்திருந்ததால் அப்பகுதி பெண்கள் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் காவல் துறை ஆய்வாளர் ராஜேஷை கண்டித்தும் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் ஆரியலூர் பகுதியில் 50க்கும் மேற்பட்ட பெண்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர் .

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் கூறுகையில்: எங்களுடைய பிள்ளைகளை பழிவாங்கும் நோக்கத்தோடு செயல்படும் முத்துப்பேட்டை காவல் ஆய்வாளர் ராஜேஷால் எங்கள் பகுதி இளைஞர்களுக்கும், சாத்தான்குளம் காவல் நிலையத்தில் ஏற்பட்டது போல முத்துபேட்டை காவல் நிலையத்திலும் ஏற்பட்டுவிட கூடாது. இந்த பழி வாங்கும் போக்கை கைவிட வேண்டும் என்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.