ETV Bharat / briefs

குரங்குகள் சரணாலயமாக மாறிய குன்னூர் சிம்ஸ் பூங்கா - நீலகிரி மாவட்ட செய்திகள்

நீலகிரி : சிம்ஸ் பூங்காவில் சுற்றித்திரியும் குரங்குகளைக் கூண்டுவைத்துப் பிடித்து வனப்பகுதியில் விட வேண்டும் எனப் பணியாளர்கள் வனத் துறையினரிடம் வலியுறுத்தியுள்ளனர்.

Monkeys in sims park
Monkeys in sims park
author img

By

Published : Jun 19, 2020, 11:30 AM IST

Updated : Jun 19, 2020, 12:08 PM IST

நீலகிரி மாவட்டம் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் ஆண்டுதோறும் கோடை சீசனில் பல்லாயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகைதருவது வழக்கம். இதற்காக லட்சக்கணக்கில் மலர் நாற்றுகள் நடவுசெய்து பராமரித்துவருகின்றனர்.

இந்நிலையில் கரோனா பாதிப்பு காரணமாக கடந்த 100 நாள்களாக சிம்ஸ் பூங்கா மூடப்பட்டுள்ளது. கோடை சீசனுக்காக நடவுசெய்யப்பட்ட பூக்கள் பூத்துக் குலுங்கியபோதும் சுற்றுலாப் பயணிகளின் பார்வையின்றி காணப்பட்டது. பழக்கண்காட்சியும் ரத்துசெய்யப்பட்டது.

இந்நிலையில் தற்போது குன்னூர் சிம்ஸ் பூங்காவில் யாரும் இல்லாததால் பூங்கா முழுவதும் குரங்குகள் அதிகளவில் குவிந்துள்ளன.

மேலும், குரங்குகள் அங்கு பணியாற்றும் பணியாளர்களை விரட்டுவதுடன் பூச்செடிகளையும் விதைகளையும் நாசப்படுத்திவருகின்றன. தோட்டக்கலை அலுவலர்களுக்குப் புகார் தெரிவித்தும் வனத் துறையினருக்குத் தெரிவிக்காமல் மெத்தனமாக உள்ளனர்.

மேலும் குரங்குகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து குரங்குகள் சரணாலயமாக மாறிவரும் சிம்ஸ் பூங்காவுக்கு இனி வருங்காலத்தில் சுற்றுலாப் பயணிகள் வராத நிலை ஏற்படும் இடர் உள்ளது.

எனவே வனத் துறையினர் குரங்குகளைக் கூண்டுவைத்துப் பிடித்து வனப்பகுதியில் விட வேண்டும் எனப் பணியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Last Updated : Jun 19, 2020, 12:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.