ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட ஊராட்சி, பேரூராட்சிகளில் உள்ள பொதுமக்களுக்கு நோய்த்தடுப்பு, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஆர்சனிகம் ஆல்பம் 30c மருந்து வழங்கும் நிகழ்ச்சி மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், சட்டப் பேரவை உறுப்பினர் சிவசுப்பிரமணியம் கலந்துகொண்டு அனைத்து ஊராட்சி, பேரூராட்சி தலைவர்கள், செயல் அலுவலர்களுக்கு சுமார் 1.5 கோடி ரூபாய் மதிப்பிலான மருந்துகளை இலவசமாக வழங்கினார்.
பின்னர் சட்டப் பேரவை உறுப்பினர் சிவசுப்பிரமணியம் பேசுகையில், "இந்த மருந்தை கர்ப்பிணிகளும், பாலூட்டும் தாய்மார்களும், ஏற்கனவே மருந்துகள் எடுத்துக்கொள்ளுபவர்களும் தாராளமாக எடுத்துக்கொள்ளலாம்" என்று கூறினார்.
மேலும் இந்த நிகழ்ச்சியில் அதிமுக நிர்வாகிகள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க:கரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்!