ETV Bharat / briefs

கரோனா பரிசோதனை முடிவுகள் 24 மணி நேரத்தில் தெரிவிக்கப்படும்: அமைச்சர் உடுமலை! - Smart City Review Meeting In Tiruppur

திருப்பூர்: கரோனா பரிசோதனை முடிவுகள் 24 மணி நேரத்தில் தெரிவிக்கும் வகையில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது என்று கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Minister Udumalai Radha Krishnan Press Meet

author img

By

Published : Jul 24, 2020, 5:05 PM IST

திருப்பூர் மாநகராட்சியின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (ஜூலை24) கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் கூறுகையில், "திருப்பூர் மாநகர பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஸ்மார்ட் சிட்டி பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கரோனா பரிசோதனை முடிவுகள் 24 மணி நேரத்தில் தெரிவிக்கும் வகையில் அரசு தலைமை மருத்துவமனையில் அனைத்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நாள்தோறும் 500 முதல் 1000 பேருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. வெளியூர்களில் இருந்து வந்தவர்களால் தற்போது கரோனா பரவி வருவதால் அவர்களை சுகாதார துறை தீவிரமாக கண்காணித்து வருகிறது.

தமிழ்நாட்டில் கால்நடை துறை சார்பாக 3 லட்சத்து 12 ஆயிரம் பேருக்கு வெள்ளாடு, கறவை மாடுகள் வழங்க பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தமிழ்நாடு முழுவதும் கால்நடை சந்தைகள் திறப்பது குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும்" எனத் தெரிவித்தார்.

மேலும் ஆய்வு கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன், சட்டப் பேரவை உறுப்பினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: ரம்மி விளையாட்டை தடை செய்க: நீதிபதி புகழேந்தி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.