ETV Bharat / briefs

கிராமங்களில் ரூ. 78 கோடி மதிப்பில் பணிகள் தொடக்கம் - 78 crore worth

தஞ்சாவூர்: ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் 2020 - 21 ஆம் ஆண்டிற்கு குக்கிராமங்களில் ரூபாய் 78 கோடி மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்வதற்காக மாவட்ட குடிநீர், சுகாதார குழுவுடன் மாவட்ட ஆட்சியர் ம.கோவிந்த ராவ் தலைமையில் கூட்டம் நடைபெற்றது.

meeting was held at Thanjavur District Collector's Office

author img

By

Published : Jul 25, 2020, 4:09 AM IST

தஞ்சை மாவட்ட குடிநீர், சுகாதாரக்குழு கூட்டம் மாவட்ட ஆட்சியர் ம.கோவிந்த ராவ் தலைமையில் நடைபெற்றது. ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் 2020 - 21 ஆம் ஆண்டிற்கு 11 ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட 154 ஊராட்சிகளை சேர்ந்த 548 குக்கிராமங்களில் ரூபாய் 78.19 கோடி மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ள கிராம அளவிலான நீர், சுகாதார குழு பரிந்துரை செய்து தொடர்புடைய ஊராட்சி மன்றங்களால் அங்கீகரிக்கப்பட்ட கிராம செயல்திட்டங்கள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

அதன்படி, தஞ்சாவூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 17 ஊராட்சிகளிலுள்ள 47 குக்கிராமங்களைச் சேர்ந்த 9510 குடியிருப்புகளுக்கு ரூபாய் 6.95 கோடி மதிப்பீட்டிலும், திருவையாறு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 18 ஊராட்சிகளிலுள்ள 36 குக்கிராமங்களைச் சேர்ந்த 13196 குடியிருப்புகளுக்கு ரூபாய் 8.01 கோடி மதிப்பீட்டிலும், ஒரத்தநாடு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 20 ஊராட்சிகளிலுள்ள 91 குக்கிராமங்களைச் சேர்ந்த 16,062 குடியிருப்புகளுக்கு ரூபாய் 10.31 கோடி மதிப்பீட்டிலும், திருவோணம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 12 ஊராட்சிகளிலுள்ள 97 குக்கிராமங்களைச் சேர்ந்த 8,517 குடியிருப்புகளுக்கு ரூபாய் 7.18 கோடி மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

அதேபோல் திருவிடைமருதூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 13 ஊராட்சிகளிலுள்ள 51 குக்கிராமங்களைச் சேர்ந்த 12,435 குடியிருப்புகளுக்கு ரூபாய் 6.69 கோடி மதிப்பீட்டிலும், திருப்பனந்தாள் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 16 ஊராட்சிகளிலுள்ள 59 குக்கிராமங்களைச் சேர்ந்த 10,420 குடியிருப்புகளுக்கு ரூபாய் 8.38 கோடி மதிப்பீட்டிலும், பாபநாசம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 11 ஊராட்சிகளிலுள்ள 40 குக்கிராமங்களைச் சேர்ந்த 8215 குடியிருப்புகளுக்கு ரூபாய் 5.57 கோடி மதிப்பீட்டிலும், பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 22 ஊராட்சிகளிலுள்ள 53 குக்கிராமங்களைச் சேர்ந்த 17558 குடியிருப்புகளுக்கு ரூபாய் 11.85 கோடி மதிப்பீட்டிலும், மதுக்கூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 11 ஊராட்சிகளிலுள்ள 15 குக்கிராமங்களைச் சேர்ந்த 5913 குடியிருப்புகளுக்கு ரூபாய் 4.42 கோடி மதிப்பீட்டிலும், பேராவூரணி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 4 ஊராட்சிகளிலுள்ள 12 குக்கிராமங்களைச் சேர்ந்த 1,951 குடியிருப்புகளுக்கு ரூபாய் 1.31 கோடி மதிப்பீட்டிலும், சேதுபாவாசத்திரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 10 ஊராட்சிகளிலுள்ள 47 குக்கிராமங்களைச் சேர்ந்த 6,899 குடியிருப்புகளுக்கு ரூபாய் 7.51 கோடி மதிப்பீட்டிலும் என தஞ்சாவூர் மாவட்டத்தில் 11 ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட 154 ஊராட்சிகளிலுள்ள 548 குக்கிராமங்களைச் சேர்ந்த 1,10,676 குடியிருப்புகளுக்கு ரூபாய் 78.19 கோடி மதிப்பீட்டில் ஜல் ஜீவன் திட்டத்தின்கீழ் பணிகள் மேற்கொள்ள தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இக்கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பழனி, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேற்பார்வை பொறியாளர் செந்தில்குமார், தொடர்புடைய துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.