தமிழ்நாட்டில் மருத்துவம், பல் மருத்துவம் ஆகிய படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் 50 விழுக்காடு இடங்களை இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு ஒதுக்கக்கோரி திமுக, அதிமுக, பாமக, திமுக ஆகியவை தொடர்ந்த வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் ஜூன் 22ஆம் தேதிக்குள் மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.
அதேசமயம், மருத்துவ மேற்படிப்புக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களை எதிர் மனுதாரராகச் சேர்க்க மனுதாரர்கள் தரப்புக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், இதே கோரிக்கையுடன் தமிழ்நாடு அரசின் சுகாதாரத் துறையும், மதிமுக பொதுச்செயலாளர் வைகோவும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.
இன்று இந்த வழக்குகள் நீதிபதிகள் சுப்பையா, கிருஷ்ணன் ராமசாமி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த மனுக்கள் குறித்தும் மத்திய அரசு ஒரு வாரத்தில் பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும் மற்ற அரசியல் கட்சிகள் தொடர்ந்த வழக்குகளுடன் சேர்த்து ஜூன் 22ஆம் தேதி விசாரிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க:விளைச்சல் இருந்தும் விலை இல்லை: சோள விவசாயிகள் வேதனை!