கரோனா அச்சம் காரணமாக ராமநாதபுரம் மாவட்ட அரசு மருத்துவமனையில் முந்தைய அளவுக்கு யாரும் இப்போது ரத்த தானம் செய்ய வருவதில்லை, ரத்த வங்கியில் போதிய ரத்தமும் இருப்பில் இல்லை என்ற தகவலும் மதிமுகவினருக்கு கிடைத்துள்ளது.
இதனை தொடர்ந்து மதிமுகவின் 28ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு பாம்பனில் உள்ள ஆரம்ப சுகாதார மையத்தில் நேற்று (மே.6) மதிமுகவினர் 32 யூனிட் இரத்ததானம் செய்தார்கள். இந்த ரத்தததான முகாமிற்கு ராமநாதபுரம் மாவட்ட மதிமுக பொறுப்பாளர் பேட்ரிக் தலைமை வகித்தார்.
இதில், மாநில மீனவரணி துணை செயலாளர் சின்னத்தம்பி, மண்டபம் ஒன்றிய பொறுப்பாளர் லூக்காஸ், மாவட்ட மீனவரணி செயலாளர் ராஜ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ராமநாதபுரம் அரசு இரத்த வங்கி பொறுப்பாளர் ஐயப்பன் இந்த இரத்ததான முகாமினை நடத்திக்கொடுத்தார்.
இதையும் படிங்க: சாமி என்னை விட்டுடுங்க..கதறும் பெண்- கொடூரமாகத் தாக்கும் காணொலி!