மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா கடக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் மூதாட்டி சாந்தி. இவர் வயல் வேலைக்கு சென்றபோது பாம்பு கடித்துள்ளது.
உடனடியாக உறவினர்கள் மூதாட்டியை மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து வந்துள்ளனர்.
அங்கு பாம்புக்கடிக்கு சிகிச்சைக்கு காலதாமதப்படுத்தி, திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்காக அனுப்பியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த மூதாட்டியின் உறவினர்கள் மருத்துவமனைக்குள் புகுந்து கண்ணாடியை உடைத்து, மருத்துவர்கள், செவிலியர்களை தாக்க முயற்சித்தனர்.
இது குறித்து காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த மயிலாடுதுறை காவல் துறையினர் கண்ணாடியை உடைத்த ஜானகிராமன் மற்றும் சிலரை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.