டெல்லி: மாருதி சூசுகி நிறுவனம் இண்டஸ்இண்ட் வங்கியுடன் கைகோர்த்து வாடிக்கையாளர்களுக்கு வாகனக் கடன் வழங்க திட்டமிட்டுள்ளது.
இதன் மூலம் முதல் மூன்று மாதத்திற்கான மாத தவணை லட்சத்துக்கு 899 ரூபாய் என்றும், அதன் பிறகு லட்சத்துக்கு1800 ரூபாய் எனவும் கடன் செலுத்தும் தொகை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
கரோனா காலத்தின் நிதி நெருக்கடியை சமாளிக்க வாகன உற்பத்தியாளார்கள் வாடிக்கையாளர்களை தங்கள் வசம் இழுக்க பல சலுகைகள் அளித்து வருகின்றனர். மாருதி சுசூகி தற்போது வரை வாகன விற்பனையில் முதலிடத்தில் உள்ளது.
இலங்கையில் கால்பதித்த ஹெச்.சி.எல். - புதிதாக 1,500 வேலைவாய்ப்புகள்!
மாருதி சுசூகியின் ஆல்டோ ரக வாகனம் பல ஆண்டுகளாக, அதிகம் விற்பனையாகிவருகிறது. இந்த வங்கியின் கூட்டின் மூலம், பயனாளிகள் முழு அளவு கட்டணத்தையும் மாதத் தவணையாக செலுத்தினால் போதும்.
அதாவது ஆரம்பக் கட்டணம் எதுவும் இல்லாமல், முழு அளவு கடன் பெற்று வாகனங்களை வாங்கிச் செல்ல முடியும் என்பது நிறுவனத்தின் அறைக்கூவலாக உள்ளது.