சென்னை பெருநகர காவல் துறை ஆணையராக மகேஷ்குமார் அகர்வால் நேற்று (ஜூலை 2) பொறுப்பேற்றுக் கொண்டார்.
இதனைத் தொடர்ந்து சென்னை பசுமை வழிச் சாலையில் உள்ள முகாம் அலுவலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
மேலும் தலைமைச் செயலாளர் சண்முகத்தையும் மரியாதை நிமித்தமாக நேரில் சென்று சந்தித்து பேசினார்.