கரோனாவால் விவசாயிகள் பாதிக்கப்பட்ட நிலையில் அவர்களின் வாழ்வாதாரம் மேம்படுத்தும் வகையில் குறைந்த விலையில் உரம் வழங்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது.
இதையடுத்து, ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகேயுள்ள பொலவக்காளிபாளையம் தொடக்கவேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் முதல் விற்பனை தொடங்க நிகழ்வு நடைபெற்றது.
அதன் முதல் விற்பனை தொடக்க நிகழ்வில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கே.சி. கருப்பணன் ஆகியோர் கலந்து கொண்டு குறைந்த விலை கால்நடை தீவன விற்பனையை தொடங்கிவைத்தனர்.
இந்த குறைந்த விலை கால்நடை தீவன விற்பனை பொலவக்காளிகாளையம் தொடக்கவேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் மூலம் பவானி, அம்மாபேட்டை, அந்தியூர், டி.என்.பாளையம், கோபிசெட்டிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 63 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களின் விவசாயிகள் பயன்பெறுவார்கள் என்றும் குறைந்த விலையில் பால் உற்பத்தியை அதிகரிக்க ஏதுவாக அமையும் என்றும் அலுவலர்கள் தெரிவித்தனர்.