ETV Bharat / briefs

வெட்டுக்கிளிகள் படையெடுப்பு - மாவட்ட ஆட்சியர் தலைமையில் கண்காணிப்புக் குழு - Locust Invasion

தேனி: வெட்டுக்கிளிகள் படையெடுப்பைத் தடுப்பதற்காக மாவட்ட ஆட்சியர் தலைமையில் கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

வெட்டுக்கிளி படையெடுப்பைத் தடுக்க   கண்காணிப்புக்குழு

author img

By

Published : Jun 3, 2020, 10:26 PM IST

தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாடு அரசின் உத்தரவுப்படி வெட்டுக்கிளிகள் படையெடுப்பைக் கண்காணித்து மேற்கோள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்காக மாவட்ட அளவிலான குழு அமைக்கப்பட்டுள்ளது.

இதில் வேளாண்மை இணை இயக்குநர், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக விஞ்ஞானி, வேளாண் அறிவியல் மைய விஞ்ஞானி, மாவட்ட வன அலுவலர், மாவட்ட தீயணைப்பு அலுவலர், தோட்டக்கலை துணை இயக்குநர், செயற்பொறியாளர் (வேளாண்மை பொறியியல்) மற்றும் வேளாண்மை உதவி இயக்குநர் தரக்கட்டுப்பாடு ஆகியோர்களை உறுப்பினர்களாக கொண்டு இந்த கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் அறிக்கையின்படி பாலைவன வெட்டுக்கிளிகள் தற்போது ராஜஸ்தானிலிருந்து கிழக்குப் பக்கமாக பீகார் மற்றும் ஒடிசா வரை பரவ வாய்ப்புள்ளது. தமிழ்நாட்டிற்கு பாலைவன வெட்டுக்கிளிகள் படையெடுத்து வருவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு என்ற போதிலும் அதனை கண்காணிக்க இக்குழுவின் முதல் கூட்டம் கடந்த ஜூன் 1ஆம் தேதி அன்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பாலைவன வெட்டுக்கிளிகள் நகர்வு குறித்து அண்டை மாநிலங்களில் உள்ள வேளாண்மை துறை வாயிலாகவும் தொடர்ந்து தகவல்களை பெற்றிட அறிவுறுத்தப்பட்டது. அரசு எடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மீறி எதிர்பாராத சூழலில் பாலைவன வெட்டுக்கிளி ஊடுருவல் ஏற்படுமாயின் அதனை உடனடியாக எதிர்கொள்ளும் பொருட்டு பரிந்துரைக்கப்பட்ட உயிரிப் பூச்சிக்கொல்லிகள் மற்றும் ரசாயன பூச்சிக் கொல்லி மருந்துகள் மற்றும் மருந்து தெளிப்பதற்கு தேவையான உபகரணங்களை போதுமான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

விவசாயிகள் வயல் அளவில் வெட்டுக்கிளி கூட்டங்கள் தென்பட்டால், டின் அல்லது டிரம்கள் கொண்டு ஒலி எழுப்புவதன் மூலம் வெட்டுக்கிளிகள் பயிர்களின் மேல் அமர்வதை தடுக்கலாம். முதலில் அசாடிராக்டின் என்னும் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வேம்பு சார்ந்த தாவரப் பூச்சிக் கொல்லிகளை பயன்படுத்த வேண்டும்.

பாலைவன வெட்டுக்கிளிகள் பெருங்கூட்டமாக தென்பட்டால் ஒரு எக்டருக்கு மாலத்தியான் 50 சதம் 1.850 லிட்டர் அல்லது மாலத்தியான் 25 சதம் நனையும் தூள் 3.7 கிலோ கிராம் அல்லது குளோர்பைரிபாஸ் 20 சதம் 1.2 லிட்டர் அல்லது லேம்டா சைக்ஹேளோத்ரின் 5 சதம் 400 மில்லி போன்றவற்றில் ஏதேனும் ஒரு மருந்தினை தெளிப்பான்கள் மற்றும் பெரிய டிராக்டர்கள் மூலம் தெளித்து கட்டுப்படுத்த வேண்டும்.

குறிப்பாக லேம்டா சைக்ஹேளோத்ரின் மருந்து அதிக திறன் வாய்ந்தது என்பதால் இதனை தெளிக்கும் பொழுது இரண்டு மணி நேரத்திற்கு மேலாக ஒரே நபர் தொடர்ந்து தெளிக்கும் பணியில் ஈடுபடக் கூடாது. பரந்த அளவில் பாலைவன வெட்டுக்கிளி தாக்குதல் ஏற்படும் பட்சத்தில், மாலத்தியான் 96 சதம் பூச்சிமருந்தை மத்திய அரசிடமிருந்து பெற்று வேளாண்மைத்துறை மூலம் ஒட்டுமொத்த முறையில் தீயணைப்பு இயந்திரம் மூலம் கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

விவசாய பெருமக்கள் வயல்களில் காணப்படும் உள்ளூர் வெட்டுக்கிளிகளை கண்டு பாலைவன வெட்டுக்கிளிகள் என அச்சப்பட வேண்டாம். இருப்பினும் வெட்டுக்கிளிகள் கூட்டமாக தென்பட்டால் விவசாயிகள் தங்கள் அருகில் உள்ள வேளாண்மைத் துறை தகவல் தெரிவித்து ஆலோசனை பெறலாம் அல்லது வெட்டுக்கிளிகளின் புகைப்படம் எடுத்து உழவன் செயலி பூச்சி நோய் கண்காணிப்பு பிரிவில் பதிவேற்றம் செய்தும் ஆலோசனை பெறலாம்" என ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.