கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்த ராஜூ(60) தனது வீட்டின் அருகில் வசிக்கும் 17 வயது சிறுமிக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளார்.
அப்பெண்ணின் பெற்றோர் வெளியே சென்றிருந்த நேரத்தில் வீட்டின் முன்புறம் அமர்ந்து இருந்த மாணவிக்கு பாலியல் ரீதியாக அவர் தொல்லை கொடுத்துள்ளார். மேலும் இதுகுறித்து வெளியே கூறினால் கொலை செய்துவிடுவேன் எனவும் மிரட்டியுள்ளார்.
இதுகுறித்து அறிந்த பின்னர் அந்த சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், ராஜூ மீது போக்சோ சட்டத்தின் கீழ் பெரியநாயக்கன்பாளையம் காவல் துறையினர் அவரை கைது செய்தனர்.