ETV Bharat / briefs

கார் எரித்த வழக்கு விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்! - திண்டுக்கல் கொலை வழக்கு

திண்டுக்கல்: காரை எரித்த வழக்கின் விசாரணையில் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட இரண்டு பெண்கள் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

kodaikanal-murder-case-because-of-love-affair

author img

By

Published : Dec 11, 2019, 1:21 PM IST

Updated : Dec 12, 2019, 11:28 AM IST

தேனி மாவட்டம் ஓடைப்பட்டியை சேர்ந்தவர் திருப்பதி (48). இவர் கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு குடும்பத்தை விட்டுப் பிரிந்து வந்து கொடைக்கானல் அருகே உள்ள சேத்துப்பாறை பகுதியில் விவசாய வேலை செய்து வந்துள்ளார். அப்போது கூம்பூர் வயலை சேர்ந்த தாஸ் என்பவரின் மனைவி ஜான்சிராணி உடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெள்ளைப்பாறை பகுதியில் முருகன் என்பவரின் கார் ஒன்று தீ வைத்து எரிக்கப்பட்டது. இதுகுறித்து காவல்துறையினர் முருகனின் தம்பி மணிகண்டன் மற்றும் அவரது நண்பர் நாகராஜ் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்துள்ளனர். விசாரணை நடத்துவதற்காக காவலர்கள் சென்றபோது மணிகண்டன் தலைமறைவாகிவிட்டார்.

இதனையடுத்து டிஎஸ்பி ஆத்மநாதன் உத்தரவின்பேரில் தனிப்படை அமைத்து மணிகண்டனை தேடி வந்தனர். இதனிடையே ரகசிய இடத்தில் பதுங்கியிருந்த மணிகண்டனை பிடித்து விசாரணை நடத்தியபோது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

அதில் மணிகண்டனுக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி குழந்தைகள் உள்ள நிலையில் ஜான்சி ராணியின் தங்கை சாந்தி என்பவருடன் காதல் இருந்தது தெரியவந்தது. இந்த தொடர்பினை அவரது சகோதரியின் காதலன் திருப்பதி கண்டித்துள்ளார். இதில் மணிகண்டனுக்கும் திருப்பதிக்கும் இடையே விரோதம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து திருப்பதியை கொலை செய்ய மணிகண்டன் மற்றும் அவரது நண்பர்கள் திட்டமிட்டு கடந்த ஆகஸ்டு மாதம் 14ஆம் தேதி கொடைக்கானலில் நடைபெற்ற புனித சலேத் அன்னை திருவிழாவைப் பார்த்துவிட்டு திருப்பதியை தங்களின் வீட்டுக்கு அழைத்துள்ளனர்.

அங்கு வைத்து அவரை மணிகண்டன் அவரது நண்பர்களான நாகராஜ், சரத்குமார், விஷ்ணு மற்றும் சாந்தி ஆகியோர் சேர்ந்து தாக்கியுள்ளனர். அதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார். இதனையடுத்து அதிகாலையில் அவரது உடலை பிக்கப் வாகனத்தில் ஏற்றிச் சென்று அடுக்கம் கிராமத்தின் அருகே நான்கு கிலோமீட்டர் தொலைவில் குருடி பள்ளம் என்ற இடத்தில் வீசி எறிந்துள்ளனர்.

கார் எரித்த வழக்கு விசாரணை 5 பேர் கைது

இதனிடையே அந்த வழக்குக்காக தன்னை காவல்துறையினர் தேடுகின்றார்கள் என்று அறிந்த மணிகண்டன், காவல்துறையிடம் சிக்கியதையடுத்து அவரிடம் நடத்திய விசாரணைையில் திருப்பதியை கொலை செய்தது தெரியவந்தது.

கடந்த இரண்டு நாட்களாக திருப்பதியின் உடலை சுமார் 600 அடி பள்ளத்தில் டிஎஸ்பி ஆத்மநாதன் தலைமையில் காவல்துறையினர், பொதுமக்கள் மற்றும் வனத்துறையினர் தேடினர். ஆனால் அவர் உடல் கிடைக்காத நிலையில், வழக்குப்பதிவு செய்தனர். இதனடிப்படையில் மணிகண்டன், சரத்குமார், நாகராஜ், ஜான்சிராணி, சாந்தி ஆகிய 5 பேரையும் கைது செய்த காவல்துறையினர், தப்பி ஓடிய விஷ்ணுவை தேடி வருகின்றனர்.

கொலை செய்யப்பட்டவரின் உடல் வீசப்பட்ட இடம் ஓடை பகுதி என்பதால் சமீபத்தில் பெய்த பெருமழையில் அவரது உடல் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் அல்லது வனவிலங்குகள் அதனை அழித்து இருக்கலாம் என காவல்துறையினர் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: இரண்டாவது மனைவி மீது கொள்ளை பிரியம்: முதல் மனைவியை கொன்ற ஆசிரியர்

Intro:திண்டுக்கல் 11.10.19

காரை எரித்த வழக்கின் விசாரணையில் கொலை வழக்கு குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். 2 பெண்கள் உள்பட 5 பேர் கைது.

Body:தேனி மாவட்டம் ஓடைப்பட்டியை சேர்ந்தவர் திருப்பதி (48). இவர் கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு குடும்பத்தை விட்டு பிரிந்து வந்து கொடைக்கானல் அருகே உள்ள பேத்துப்பாறை பகுதியில் விவசாய வேலை செய்து வந்துள்ளார். அப்போது கூம்பூர் வயலை சேர்ந்த தாஸ் என்பவரின் மனைவி ஜான்சிராணி உடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெள்ளைப் பாறை பகுதியில் முருகன் என்பவரின் கார் ஒன்று தீ வைத்து எரிக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் முருகனின் தம்பி மணிகண்டன் மற்றும் அவரது நண்பர் நாகராஜ் ஆகியோர் மீது பதிவு செய்து விசாரணை நடத்தி வந்துள்ளனர். விசாரணை நடத்துவதற்காக போலீசார் சென்றபோது மணிகண்டன் தலைமறைவாகிவிட்டார். இதனையடுத்து டிஎஸ்பி ஆத்மநாதன் உத்தரவின்பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு மணிகண்டனை தேடி வந்தனர். இதனிடையே ரகசிய இடத்தில் பதுங்கி இருந்த மணிகண்டனை பிடித்து விசாரணை நடத்தியபோது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

அதில் மணிகண்டனுக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி குழந்தைகள் உள்ள நிலையில் ஜான்சி ராணியின் தங்கை சாந்தி என்பவருடன் காதல் இருந்தது தெரியவந்தது.
இந்த தொடர்பினை அவரது சகோதரியின் காதலன் திருப்பதி கண்டித்துள்ளார். இதில் மணிகண்டனுக்கும் திருப்பதிக்கும் இடையே விரோதம் இருந்து வந்துள்ளது.

இதையடுத்து திருப்பதியை கொலை செய்ய மணிகண்டன் மற்றும் அவரது நண்பர்கள் திட்டமிட்டு கடந்த ஆகஸ்டு மாதம் 14ஆம் தேதி கொடைக்கானலில் நடைபெற்ற புனித சலேத் அன்னை திருவிழாவை பார்த்துவிட்டு திருப்பதியை தங்களின் வீட்டுக்கு அழைத்து உள்ளனர். அங்கு வைத்து அவரை மணிகண்டன் அவரது நண்பர்களான நாகராஜ், சரத்குமார், விஷ்ணு மற்றும் சாந்தி ஆகியோர் சேர்ந்து தாக்கியுள்ளனர். அதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார். இதனையடுத்து அதிகாலையில் அவரது உடலை பிக்கப் வாகனத்தில் ஏற்றிச் சென்று அடுக்கம் கிராமத்தின் அருகே நான்கு கிலோமீட்டர் தொலைவில் குருடி பள்ளம் என்ற இடத்தில் வீசி எறிந்து உள்ளனர். இதனிடையே அந்த வழக்குக்காக தான் தன்னை போலீசார் தேடுகின்றார்கள் என்று அறிந்த மணிகண்டன் போலீசாரிடம் சிக்கியதையடுத்து அவரிடம் நடத்திய விசாரணைையில் திருப்பதியை கொலை செய்தது தெரியவந்தது. கடந்த இரண்டு நாட்களாக அவரின் உடலை சுமார் 600 அடி பள்ளத்தில் டிஎஸ்பி ஆத்மநாதன் தலைமையில் போலிசார், பொதுமக்கள் மற்றும் வனத்துறையினர் தேடினர். ஆனால் அவர் உடல் கிடைக்காத நிலையில் இதுகுறித்து இன்று மாலை வழக்கு பதிவு செய்தனர்.
இதனடிப்படையில் மணிகண்டன் சரத்குமார், நாகராஜ், ஜான்சிராணி, சாந்தி ஆகிய 5 பேரையும் கைது செய்த போலீசார் தப்பி ஓடிய விஷ்ணுவை தேடி வருகின்றனர்.

கொலை செய்யப்பட்டவரின் உடல் வீசப்பட்ட இடம் ஓடை பகுதி என்பதால் சமீபத்தில் பெய்த பெருமழையில் அவரது உடல் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் அல்லது வனவிலங்குகள் அதனை அழித்து இருக்கலாம் என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.Conclusion:
Last Updated : Dec 12, 2019, 11:28 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.