கேரளா மாநிலம் கோட்டையம் மாவட்டத்தில் சாந்த்வனம் அறக்கட்டளை இயங்கிவருகிறது. இந்த அறக்கட்டளையின் சார்பில் ஆதரவற்றோர் காப்பகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த அறக்கட்டளை இயக்குநரின் கணவர் வர்கீஸ் அங்கு தங்கியுள்ள பெண்களை பாலியல் வன்புணர்வு செய்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த 2019ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 17 வயது சிறுமியை அவர் பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். இது குறித்து அச்சிறுமி அரசு அலுவலர்களிடம் புகார் தெரிவித்தார். ஆனால், அலுவலர்கள் அச்சிறுமியின் புகாருக்கு செவிசாய்க்கவில்லை. இதனால், மனமுடைந்த அச்சிறுமி குழந்தை நலக்குழு அலுவலர்களிடம் புகார் அளித்தார்.
இதையடுத்து, குழந்தை நலக்குழு அலுவலர்கள் அச்சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டனர். அதில், பல பெண்கள் உள்பட சிறுமியையும் வர்கீஸ் பாலியல் வன்புணர்வு செய்தது துன்புறுத்தியது தெரியவந்தது. இருப்பினும், இதுவரை வர்கீஸ் கைது செய்யப்படவில்லை. மேலும், இந்தச் சம்பவத்திற்குப் பிறகு, சிறுமிகள் வேறு காப்பகத்திற்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க: ’சோறு இல்லாமல் நாங்க பட்டினி கிடக்கிறோம்’ - வாக்குவாதத்தில் ஈடுபட்ட கரோனா நோயாளிகள்