கரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தமிழ்நாடு அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக ஜவுளி நிறுவனங்கள் ஜூவல்லரி கடைகள் உள்ளிட்டவைகளில் குளிர்சாதனங்கள் பயன்படுத்தக் கூடாது. தகுந்த இடைவெளியை பின்பற்ற வேண்டும், வாடிக்கையாளர்கள் கட்டாயம் முகக்கவவசம் அணிய வேண்டும் என்று பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதை மீறும் நிறுவனங்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.
இந்த நிலையில், ஈரோடு காவேரி சாலையில் ஜோஸ் ஆலுக்காஸ் ஜூவல்லரி கடை செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் தமிழ்நாடு அரசு கூறிய விதிமுறைகளை பின்பற்றவில்லை என்று புகார் எழுந்தது. அதைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் கதிரவன் உத்தரவின் பேரில் கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது தகுந்த இடைவெளியை பின்பற்றாமல் செயல்பட்டது, குளிர்சாதனம் பயன்படுத்தியது உள்ளிட்டவை தெரிய வந்தது. இதையடுத்து அங்கு வந்த அலுவலர்கள், ஜோஸ் ஆலுக்காஸ் நிறுவனத்திற்கு மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்பேரில் சீல் வைத்தனர்.