கனடா கால்பந்து நாட்டின் நட்சத்திர வீராங்கனையாக திகழ்பவர் ஜோர்டின் ஹூய்துமா. பிரான்ஸ் நாட்டில் நடைபெற்று வரும் மகளிர் உலகக்கோப்பை கால்பந்து தொடரில், இவர் கனடா அணிக்காக விளையாடி வருகிறார். இந்தத் தொடரில் நன்றாக ஆடி வரும் கனடா அணி, நாக் அவுட் சுற்றில் சுவிடன் அணியை எதிர்கொள்கிறது. இதற்காக, கனடா வீராங்கனைகள் பயிற்சியில் ஈடுபட்டனர். இதில், கனடா நாட்டின் ஃபார்வார்ட் வீராங்கனையான ஜோர்டின் ஹூய்துமாவும் இணைந்துள்ளார்.
நாக் அவுட் போட்டி என்ற பதட்டத்தில் மற்ற வீராங்கனைகள் தீவிர பயிற்சியில் ஈடுபட்ட நிலையில், இவரோ தனது கைகளை அசைத்து, கால்பந்து வீராங்கனை என்பதை மறந்து டான்சராக மாறினார். பிரபலமான தேங் யூ, நெக்ஸ்ட் என்ற பாடலுக்கு ஏற்ப டான்ஸ் மூவ்மென்டுகளை செய்து அசத்தியுள்ளார். இணையதளத்தில் வெளியான இந்த காணொலி தற்போது வைரலாகி வருகிறது.