தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 14 ஊராட்சி ஒன்றியங்களிலும் உள்ள 589 ஊராட்சிகளில் உள்ள 2,280 கிராமங்களில் உள்ள அனைத்து குடியிருப்பு வீடுகளுக்கும், பொதுமக்கள் பயன்படுத்தும் மருத்துவமனை, பள்ளிக்கூடம் , அங்கன்வாடி போன்ற அனைத்து அரசு அலுவலக கட்டடங்களுக்கும் ஊராட்சிப் பகுதியில் உள்ள கால்நடைகளின் பயன்பாட்டிற்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் இணைப்பு 100 விழுக்காடு அளித்திட மத்திய, மாநில நிதி ஒதுக்கீட்டில் ஜல் ஜீவன் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது .
இத்திட்டத்தில் கிராம அளவில் செயல்படுத்திட அந்தந்த கிராம ஊராட்சி மன்றங்களின் மூலம் கிராம வளர்ச்சிக்குழு, கிராம அளவிலான குடிநீர் சுகாதார குழு (Village Water Sanitation Committee) ஏற்படுத்தப்பட்டு பொதுமக்கள் கருத்துகளை ஏற்று கிராம செயல் திட்ட வரைவினை (Village Action Plan) தயாரித்து ஊராட்சி கிராம சபைக் கூட்டத்தில் ஒப்புதலுக்கு அளித்திட தெரிவிக்கப்பட்டுள்ளது .
மேலும் 2020-21ஆம் நிதியாண்டிற்கு ஜல் ஜீவன் திட்டம் செயல்படுத்திட முதற்கட்டமாக தஞ்சாவூர் மாவட்டத்தில் 182 கிராம ஊராட்சிகளில், 645 குக்கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இத்திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்திட தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கோவிலூர் கிராம ஊராட்சியில் ஊரக வளர்ச்சித் துறை, கால்நடை பராமரிப்புத்துறை, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், மீன்வளத்துறை, பொதுப்பணித்துறை, வேளாண்மைத்துறை, தோட்டக்கலை உள்ளிட்ட அனைத்துத் துறை அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது .
களப்பணியின் முதல் நிகழ்வாக கோவிலூர் ஊராட்சி பொது மக்களிடம் கலந்துரையாடல் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து கிராமத்தில் அமைந்துள்ள அனைத்து குளங்கள், ஏரிகள், பாசன வாய்க்கால்கள் , ஆறுகள் உள்ளிட்ட அனைத்து நீர் நிலைகளைகளையும், பண்ணைக்குட்டைகள் , மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளின் அருகில் அமைக்கப்பட்டுள்ள உறிஞ்சு குழிகள், மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் , கழிவு நீர் உறிஞ்சு குழிகள் உள்ளிட்ட அனைத்து வகையான நிலத்தடி நீர் சேகரிப்பு அமைப்புகள், ஒவ்வொரு தெருக்களில் உள்ள வீட்டு குடிநீர் இணைப்புகளில் வழங்கப்படும்.
அதேசமயம் நீரின் அளவு குறித்து அனைத்துத் துறை அலுவலர்களுடன் மாவட்ட ஆட்சியர் நேரடியாகச் சென்று பார்வையிட்டும், பொது மக்களுக்கு பட்டா வழங்குதல், முதியோர் ஓய்வூதியம் வழங்குதல் போன்ற பணிகளுக்கு உரிய நடவடிக்கை எடுத்திட பொறுப்பான அலுவலர்களுக்கு உரிய அறிவுரைகள், வழிகாட்டுதல்களை வழங்கினார் .