மக்களவைத் தேர்தலோடு சேர்த்து ஆந்திர மாநிலத்தில் உள்ள 175 சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடந்தது. இதில் சட்டப்பேரவையில் 151 இடங்களை ஜெகன்மோகனின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி வென்றது. மக்களவையில் 25 இடங்களையும் கைப்பற்றியது. இதைத் தொடர்ந்து ஆந்திராவின் புதிய முதலமைச்சராக ஜெகன் மோகன் ரெட்டி பதவியேற்றுக் கொண்டார். பதவியேற்றதில் இருந்து பல அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துவருகிறார்.
ஆந்திராவில் உள்ள பிரசித்திபெற்ற திருமலை திருப்பதி வெங்கடாஜலபதி கோயில் தேவஸ்தான தலைவராக, ஜெகன் மோகனின் தாய்மாமான் சுப்பா ரெட்டி நியமிக்கப்பட உள்ளதாக சில நாட்களுக்கு முன்பு தகவல் வெளியானது. அவர் கிறிஸ்தவர் எனக் கூறப்பட்டது.
ஆனால் தான் இந்து மதத்தையே பின்பற்றி வருவதாக சுப்பாரெட்டி விளக்கம் அளித்தார். இந்நிலையில் திருமலை திருப்பதி தேவஸ்தான தலைவராக சுப்பாரெட்டி நியமிக்கப்படுவதாக அம்மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்தார். அவர் நாளை பதவியேற்கவுள்ளார்.