ETV Bharat / briefs

தமிழ்நாட்டில் இடி மின்னலுடன் மழை பெய்யும்! - Rain updates

தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய இலேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Tamil Nadu Rain Updates
Tamil Nadu Rain Updates
author img

By

Published : Apr 23, 2021, 1:40 PM IST

மகாராஷ்டிரா முதல் தென் தமிழ்நாடு கடலோரப் பகுதிவரை நிலவும் (1.5 கிலோமீட்டர் உயரம்வரை ) வளிமண்டல சுழற்சி காரணமாக ஏப்ரல் 23 முதல் 27 வரை மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, நீலகிரி, திருப்பூர், திருப்பத்தூர், மதுரை, தேனி, திண்டுக்கல், கரூர், நாமக்கல், திருச்சி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியகுமாரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

ஏனைய மாவட்டங்கள் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். கடலோர மாவட்டங்களில் காற்றில் ஒப்பு ஈரப்பதம் (Relative Humidity) 50 முதல் 90 விழுக்காடு வரை உள்ளதால் காற்றின் இயல்பான வெப்பநிலையானது 4 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக உணரப்படும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

காற்றில் ஒப்பு ஈரப்பதம் (Relative Humidity) 50 முதல் 90 விழுக்காடு வரை உள்ளதால் பிற்பகல் முதல் காலை வரை வெக்கையாகவும், இயல்புக்கு மாறாக அதிகமாகவும் வியர்க்கும்.

கடந்த 24 மணி நேரத்தில் திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரியில் 3 செ.மீீ., கிருஷ்ணகிரி மாவட்டம் தளி, கோயம்புத்தூர் மாவட்டம் சோலையார், நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் தலா 1 செ.மீ. மழையும் பெய்துள்ளது.மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.